பொதுத்தேர்வில் வெற்றி பெற மாணவர்களுக்கு ராகுல் காந்தி வாழ்த்து
பொதுத்தேர்வில் வெற்றி பெற மாணவர்களுக்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் 10–ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இதையொட்டி காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய முகநூல் பக்கத்தில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:–
பொதுத்தேர்வுக்காக மாணவர்கள் அனைவரும் தீவிரமாக படித்து இருப்பீர்கள் என்பது எனக்கு தெரியும். தேர்வில் உங்கள் திறமையை வெளிக்காட்டுங்கள். எவ்வித பதற்றமும் இல்லாமல் தேர்வை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள். பிரகாசமான எதிர்காலம் உங்களுக்கு இந்த உலகில் காத்திருக்கிறது. தேர்வில் அனைவரும் வெற்றி பெற வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story