இந்திய படைகள் பா.ஜனதா, மோடி, அமித்ஷாவிற்கு சொந்தமானது கிடையாது - திரிணாமுல் சாடல்
இந்திய படைகள் இந்திய நாட்டிற்கு சொந்தமானது, பா.ஜனதா, மோடி, அமித்ஷாவிற்கு சொந்தமானது கிடையாது என திரிணாமுல் காங்கிரஸ் விமர்சனம் செய்து வருகிறது.
2019 தேர்தலில் வெற்றிப் பெறுவதற்காக புல்வாமா பயங்கரவாத தாக்குதல், 40 வீரர்கள் உயிரிழப்பை பா.ஜனதா பயன்படுத்துகிறது என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் பா.ஜனதாவை கடுமையாக சாடியுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தெரிக் ஒ பிரையன் வெளியிட்டுள்ள டுவிட் செய்தியில், “வாங்கு வங்கி அரசியலை மேற்கொள்பவர்கள் யாரென்று பாருங்கள்! அமித்ஷா மற்றும் பா.ஜனதாவினர் பிரிவினைவாத மற்றும் எதிர்மறை அரசியலின் மோசமான ஆதரவாளர்கள். தேசப்பக்தி தொடர்பான உங்களுடைய விரிவுரையை நாங்கள் கேட்கமாட்டோம். இந்தியப் படைகள் இந்திய தேசத்திற்கு சொந்தமானது, மோடி, அமித்ஷா, பா.ஜனதாவிற்கு சொந்தமானது கிடையாது,” என கடுமையாக பதிவிட்டுள்ளார்.
சுதந்திர போராட்டத்தின் போது ஒளிந்து கொண்ட பா.ஜனதாவிற்கு தேசப்பற்று தொடர்பாக சான்றிதழ் கொடுக்க எந்த ஒரு உரிமையும் கிடையாது எனவும் காட்டமாக பதிவிட்டுள்ளார்.
வியாழன் அன்று மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில், நாங்கள் இந்தியப்படைகளுக்கு முழு மரியாதையை கொடுக்கிறோம், ஆனால் அவர்களுடைய தியாகங்களை அரசியலாக்கியது கிடையாது என கடும் தாக்குதலை முன்வைத்தார்.
Related Tags :
Next Story