வங்கி கணக்கு, சிம் கார்டுகளுக்கு ஆதார் எண் கட்டாயம் - மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல்


வங்கி கணக்கு, சிம் கார்டுகளுக்கு ஆதார் எண் கட்டாயம் - மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல்
x
தினத்தந்தி 3 March 2019 5:35 PM GMT (Updated: 3 March 2019 5:35 PM GMT)

வங்கி கணக்கு, சிம் கார்டுகளுக்கு இனி ஆதார் எண் கட்டாயம் என்ற மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.

புதுடெல்லி,

வங்கி கணக்கு தொடங்கவும், சிம் கார்டு வாங்கவும் ஆதார் அடையாள அட்டையை விருப்பப்பட்டவர்கள் வழங்க வகை செய்யும் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்தது. இந்த சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேறாத நிலையில், நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேறியது. இதைத்தொடர்ந்து இதுதொடர்பான அவசர சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்தது. இந்த சட்டத்துக்கு ஒப்புதல் பெற மத்திய அரசு ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தது.

இந்நிலையில், வங்கி கணக்கு மற்றும் சிம் கார்டுகள் பெறும்போது ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்ற அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.


Next Story