இந்தியாவில் மின்னணு கழிவுப்பொருட்கள் அதிகரிப்பு; ஆய்வில் அதிர்ச்சி தகவல்
இந்தியாவில் மின்னணு கழிவுப்பொருட்கள் அதிகரித்து வருகிறது என அதிர்ச்சி தகவல் ஆய்வில் வெளியாகி உள்ளது.
கொல்கத்தா,
இந்தியா உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகளில் கம்ப்யூட்டர் உள்ளிட்ட மின்னணு பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஆண்டுதோறும் மின்னணு கழிவுகள் அதிகரித்து வருவதால் அதனை அகற்றுவது பெரும் சவாலாக உள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் மின்னணு கழிவுகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாக அசோசம் தொழில் வர்த்தக சபை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
மின்னணு கழிவுகள் உருவாக்கத்தில் இந்தியா 5வது இடத்தை பெற்றுள்ளது. சீனா முதல் இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த 3 இடங்களில் அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி உள்ளன.
நமது நாட்டில் கடந்த 2016ல் 2 மில்லியன் டன் மின்னணு கழிவுகள் இருந்தன. இது அடுத்த ஆண்டில் (2020) 5.2 மில்லியன் டன்னாக அதிகரிக்கும். மராட்டிய மாநிலத்தில் மின்னணு கழிவுகளின் பயன்பாடு 19.8 சதவீதமாக உள்ளது. அங்கு ஆண்டுக்கு 47 ஆயிரத்து 810 டன் மின்னணு கழிவுப்பொருட்களே மறுசுழற்சி செய்யப்படுகின்றன.
இந்த கழிவுப்பொருட்களின் பயன்பாட்டில் தமிழகத்தின் பங்கு 13 சதவீதமாக உள்ளது. இதில் வருடந்தோறும் 52 ஆயிரத்து 427 டன் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன.
Related Tags :
Next Story