மனோகர் பாரிக்கர் முற்றிய புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் - கோவா அமைச்சர்


மனோகர் பாரிக்கர் முற்றிய புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் - கோவா அமைச்சர்
x
தினத்தந்தி 4 March 2019 2:59 PM IST (Updated: 4 March 2019 2:59 PM IST)
t-max-icont-min-icon

கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கருக்கு புற்றுநோய் முற்றிவிட்டதாக கோவாவின் நகர திட்டத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

கோவா, 

மனோகர் பாரிக்கருக்கு கணைய புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக கோவா சுகாதாரத்துறை அமைச்சர் விஸ்வஜித் ரானே தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் மனோகர் பாரிக்கருக்கு புற்றுநோய் முற்றிவிட்டதாக, கோவாவின் நகர திட்டத்துறை அமைச்சர் விஜய் சர்தேசாய் தற்போது கூறியுள்ளார். திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியது தொடர்பாக முதலமைச்சர் மனோகர் பாரிக்கரை இன்று (திங்கள் கிழமை) சந்திக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.

புற்றுநோய் முற்றியுள்ள போதும், மக்களுக்காக பாரிக்கர் உழைத்து கொண்டிருப்பதாக  விஜய் சர்தேசாய் குறிப்பிட்டார். 

Related Tags :
Next Story