பால்கோட்டில் இந்தியா தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக, 300-க்கும் மேற்பட்ட தொலைபேசி இணைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருந்தன
பால்கோட்டில் இந்தியா தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக, 300-க்கும் மேற்பட்ட தொலைபேசி இணைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருந்ததாக தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பு உறுதி செய்துள்ளது.
புதுடெல்லி,
கடந்த 26-ம் தேதி அதிகாலை 3:30 மணியளவில் இந்தியாவில் உள்ள 12 மிராஜ் 2000 ரக விமானங்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ள பால்கோட்டில் தாக்குதல் நடத்தின. அந்தத் தாக்குதலில் புல்வாமா தாக்குதலுக்குக் காரணமான ஜெயிஷ் இ முகமது அமைப்பின் முகாம்கள் அழிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. ஜெய்ஷ் இ முகமது அமைப்பு மீது இந்தியா தாக்குதல் நடத்தியது உண்மைதான் என அந்த அமைப்பின் தலைவர் மசூத் அஸாரின் தம்பி மௌலானா அமர் தெரிவித்தார்.
இந்நிலையில் பால்கோட்டில் இந்தியா தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக, அந்த பகுதியில் 300-க்கும் மேற்பட்ட தொலைபேசி இணைப்புகள் செயல்பட்டு கொண்டிருந்ததாக தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பு உறுதி செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்த தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பு ஈடுபட்டுள்ளது.
Related Tags :
Next Story