தேசிய செய்திகள்

எதிர்க்கட்சிகள் பொது அறிவை பயன்படுத்த வேண்டும் - ரபேல் விமானம் பற்றிய தனது கருத்துக்கு பிரதமர் மோடி விளக்கம் + "||" + Opposition wants to use common sense - Prime Minister Modi has interpreted his views on the flight of Rafael

எதிர்க்கட்சிகள் பொது அறிவை பயன்படுத்த வேண்டும் - ரபேல் விமானம் பற்றிய தனது கருத்துக்கு பிரதமர் மோடி விளக்கம்

எதிர்க்கட்சிகள் பொது அறிவை பயன்படுத்த வேண்டும் - ரபேல் விமானம் பற்றிய தனது கருத்துக்கு பிரதமர் மோடி விளக்கம்
ரபேல் விமானம் பற்றிய தனது கருத்தை விமர்சனம் செய்த எதிர்க்கட்சிகள் பொது அறிவை பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.
ஜாம்நகர்,

பிரதமர் நரேந்திரமோடி, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியதால் ஏற்பட்ட மோதலின்போது ரபேல் போர் விமானங்கள் இருந்திருந்தால், முடிவு வேறுவிதமாக அமைந்திருக்கும் என்று கூறினார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், வேறுவிதமான முடிவு என்றால் எப்படி? என்றும், பிரதமரே இந்திய விமானப்படையின் வலிமை பற்றி கேள்வி எழுப்புகிறார் என்றும் கூறின.


இந்நிலையில் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இதற்கு விளக்கம் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ரபேல் விமானம் உரிய காலத்தில் வாங்கியிருந்தால், கடந்த 27-ந் தேதி பாகிஸ்தான் விமானங்கள் எல்லைதாண்டி வந்தபோது நடந்த தாக்குதலில் அது வேறுவிதமான முடிவை ஏற்படுத்தி இருக்கும் என்று தான் நான் கூறினேன். ஆனால் எதிர்க்கட்சிகள் மோடி இந்திய விமானப்படை தாக்குதலை கேள்வி எழுப்புகிறார் என்று சொல்கிறார்கள்.

தயவு செய்து பொது அறிவை பயன்படுத்துங்கள். நான் சொன்னது என்னவென்றால், நம்மிடம் ரபேல் விமானங்கள் இருந்திருந்தால் இருநாட்டு போர் விமானங்களும் தாக்குதலில் ஈடுபட்ட நேரத்தில் நமது விமானம் எதுவும் கீழே விழுந்திருக்காது, அவர்களில் ஒருவர் கூட காப்பாற்றப்பட்டு இருக்க முடியாது.

ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் பயங்கரவாத முகாம்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு ஆதாரம் கேட்கிறார்கள். பயங்கரவாதம் என்ற நோயின் வேர் அண்டை நாட்டில் பரவியிருக்கிறது. நாம் அந்த நோயை அதன் வேரில் இருந்து குணப்படுத்த வேண்டாமா?

ஏன் அதன் வழிகாட்டிகள் இந்தியாவிலோ, அல்லது நாட்டுக்கு வெளியிலோ இருந்து இந்தியாவை அழிக்க நினைத்தால், நமது நாடு அமைதியாக உட்கார்ந்து இருக்காது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. எதிர்க்கட்சிகள் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி: புதுச்சேரி சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் - ரங்கசாமி தலைமையில் சட்டசபை செயலாளரிடம் கடிதம் கொடுத்தனர்
புதுவை சபாநாயகர் சிவக்கொழுந்து மீது நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி தலைமையில் சட்டசபை செயலாளரிடம் கடிதம் கொடுத்தனர். இதன் மூலம் எதிர்க்கட்சிகள் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
2. எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்த சந்திரபாபு நாயுடுவுக்கு ‘பூஜ்ஜியம்’
எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்த சந்திரபாபு நாயுடு ஆந்திராவில் படுதோல்வியை நோக்கி செல்கிறார்.
3. எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து அடுத்த அரசை அமைக்கும் - ராகுல் காந்தி பேட்டி
எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து அடுத்த அரசை அமைக்கும் என்று ராகுல் காந்தி கூறினார்.
4. எதிர்க்கட்சிகளில் முன்னிலை வகிப்போம்: நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 200 இடங்களில் வெற்றி பெறும் - வீரப்ப மொய்லி பேட்டி
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 200 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சிகளில் முன்னிலை வகிக்கும் என்று முன்னாள் மத்திய மந்திரி வீரப்ப மொய்லி கூறினார்.
5. எதிர்க்கட்சிகள் விவகாரத்தில் ‘தேர்தல் கமிஷன் முற்றிலும் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது’ - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
எதிர்க்கட்சிகள் தொடர்பான விவகாரங்களில் தேர்தல் கமிஷன் முற்றிலும் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.