தேர்தல் தேதி அறிவிப்பு தாமதம்; பிரதமரின் அரசு பயணங்கள் முடிவதற்காக காத்திருப்பதா? - தேர்தல் கமி‌ஷனுக்கு காங்கிரஸ் கேள்வி


தேர்தல் தேதி அறிவிப்பு தாமதம்; பிரதமரின் அரசு பயணங்கள் முடிவதற்காக காத்திருப்பதா? - தேர்தல் கமி‌ஷனுக்கு காங்கிரஸ் கேள்வி
x
தினத்தந்தி 4 March 2019 10:46 PM GMT (Updated: 4 March 2019 10:46 PM GMT)

பிரதமரின் அரசு பயணங்கள் முடிவதற்காக காத்திருப்பதால், தேர்தல் தேதி அறிவிப்பு தாமதம் செய்யப்படுகிறதா என தேர்தல் கமி‌ஷனுக்கு காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.

புதுடெல்லி,

தேர்தல் தேதி அறிவிக்க தாமதம் செய்வதன் பின்னணியில் பிரதமர் அலுவலகம் இருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது பட்டேல் தனது டுவிட்டர் பதிவில், “ பொதுத்தேர்தல் தேதி அறிவிப்புக்கு பிரதமரின் அரசு முறை சுற்றுப்பயணங்கள் முடிவதற்காக தேர்தல் கமி‌ஷன் காத்திருக்கிறதா? தேர்தல் பிரசாரத்துக்காக அரசு விழாக்களை ஒரு கருவியாக பயன்படுத்துகிறார்கள். அனைத்து பிரிவு ஊடகங்களுக்கும் அரசியல் விளம்பரங்கள் வழங்கப்படுகிறது. இது தேர்தல் கமி‌ஷன், அரசு பணத்தை செலவழிக்கும் கடைசி நிமிடம் வரை மத்திய அரசுக்கு ஒரு நீண்ட வாய்ப்பை வழங்குவதாக தெரிகிறது” என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த முறை நாடாளுமன்ற தேர்தல் தேதி மார்ச் மாதம் முதல் வாரத்திலேயே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story