புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு ரூ.110 கோடி நிதி அளித்த மாமனிதர்
புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு ரூ.110 கோடியை நிதியாக அளிக்க உள்ளதாக மும்பையை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.
மும்பையை சேர்ந்த 44 வயதாகும் முர்தாஜ் ஏ.ஹமீது என்ற மாற்றுத்திறனாளியான இவர் தற்போது மும்பையில் ஆராய்ச்சியாளராகவும் இருந்து வருகிறார். இவர் புல்வாமா தற்கொலைப்படை தாக்குதலில் வீரமரணம் அடைந்த 40 வீரர்களின் குடும்பங்களுக்கு ரூ.110 கோடி நிதியை பிரதமர் தேசிய மீட்பு நிதிக்காக வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த தொகையை பிரதமரை சந்தித்து நேரடியாக கொடுப்பதற்காக பிரதமர் அலுவலகத்திற்கு இமெயில் மூலம் அனுமதியும் கேட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில்,
நம் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களின் தியாகம் ஒவ்வொரு இந்திய குடிமகனின் ரத்தத்திலும் கலந்துள்ளது. இந்த எண்ணம் தான் அவர்களுக்கு உதவ வேண்டும் என என்னை தூண்டியது. தான் சேர்த்து வைத்த சம்பள பணத்தில் இருந்து இதனை அளிக்க விரும்பி இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்தார்.
தன் உயிரை கொடுத்து நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்களுக்காக இந்த தொகையை கொடுப்பதில் பெருமிதம் அடைகிறேன் என முர்தாஜ் ஏ.ஹமீது தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story