விமானப்படை தாக்குதல்; உ.பி.யில் பா.ஜனதா மேலும் 12 தொகுதிகளில் வெற்றி - கருத்துக்கணிப்பு
விமானப்படை தாக்குதலை அடுத்து உ.பி.யில் பா.ஜனதா மேலும் 12 தொகுதிகளில் வெற்றிப்பெறும் என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
பாகிஸ்தானில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலை அடுத்து இந்தியா டிவி- சிஎன்எக்ஸ் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் பா.ஜனதா உத்தரபிரதேசத்தில் 41 தொகுதிகளில் வெற்றிப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு முன்னதாக இந்நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் பா.ஜனதா கூட்டணி 29 தொகுதிகளில் மட்டுமே வெற்றிப்பெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இப்போது 12 தொகுதிகள் உயர்ந்துள்ளது.
இதற்கிடையே மகா கூட்டணி வைத்திருக்கும் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், ராஷ்டீரிய லோக் தளம் மொத்தம் 35 தொகுதிகளில் வெற்றிப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரசின் செல்வாக்கும் உயர்கிறது, அக்கட்சி தனித்து போட்டியிட்டு 4 தொகுதிகளில் வெற்றிப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story