டெல்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி இல்லையென காங்கிரஸ் அறிவிப்பு
டெல்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி இல்லையென காங்கிரஸ் அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
புதுடெல்லியில் மொத்தம் 7 பாராளுமன்றத் தொகுதிகள் உள்ளது. பா.ஜனதாவிற்கு எதிரான கொள்கையில் காங்கிரசும், ஆம் ஆத்மியும் ஒரு வரிசையில் வருகிறது. எனவே, இரு கட்சிகளும் டெல்லியில் கூட்டணி வைக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கான பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. ஆனால் கெஜ்ரிவாலால் ஆட்சியைவிட்டு அகற்றப்பட்ட ஷீலா தீட்சித்திற்கு கூட்டணியில் நாட்டம் இல்லை என தகவல் வெளியாகியது. இதற்கிடையே பல்வேறு யோசனைகளுடன் ஆம் ஆத்மி பேச்சுவார்த்தையை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் கூட்டணியில்லையென 6 தொகுதிகளுக்கு ஆம் ஆத்மி வேட்பாளர்களை அறிவித்தது. ஒரு தொகுதியை வைத்திருந்தது.
காங்கிரசுக்கு இரண்டு தொகுதி வரையில் தரவும், பஞ்சாப்பில் கூட்டணி வைக்கவும் ஆம் ஆத்மி முன்வந்துள்ளது.
ஆனால் டெல்லி காங்கிரஸ் தலைமையில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைக்க நேர்மறையான கருத்து எழவில்லை. இதனையடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை டெல்லி காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து பேசினர். 2 மணி நேரங்களுக்கு மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மாநில தலைவர்கள் கருத்தை ராகுல் ஏற்றதாக தெரிகிறது. ஷீலா தீட்சித் பேசுகையில், “ஆம் ஆத்மியுடன் கூட்டணியில்லை, இது இறுதியானது. முடிவை ராகுல் காந்தி ஏற்றுக்கொண்டார். காங்கிரஸ் 7 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும்,” என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story