நீர்மூழ்கி கப்பல் வீடியோவில் தேதியை மாற்றிய பாகிஸ்தான், இந்தியா மூக்குடைப்பு
நீர்மூழ்கி கப்பல் விவகாரத்தில் பாகிஸ்தான் வெளியிட்டுள்ள வீடியோவில் தேதி மட்டும் மாற்றப்பட்டுள்ளது என இந்தியா அந்நாட்டு குற்றச்சாட்டை நிராகரித்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் கப்பற்படை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், எங்கள் கடல் எல்லைக்குள் இந்திய நீர்மூழ்கி கப்பல் ஒன்று நுழைய முயன்றது. இதனை பாகிஸ்தான் கப்பற்படை தனித்திறனுடன் முறியடித்து விட்டது என தெரிவித்தது. இந்திய விமானப்படை பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை அழித்த பின்னர் இருதரப்பு இடையே பதற்றமான நிலை காணப்பட்டது. இந்நிலையில் மூன்றாம் தேதி இந்திய நீர்மூழ்கி கப்பல் அத்துமீறியதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. ஆனால் இது 2106-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட வீடியோவாக இருக்கலாம் என இந்திய பாதுகாப்பு தரப்பு தகவல்கள் வெளியாகியது.
இந்நிலையில் நீர்மூழ்கி கப்பல் விவகாரத்தில் பாகிஸ்தான் வெளியிட்டுள்ள வீடியோவில் தேதி மட்டும் மாற்றப்பட்டுள்ளது என இந்தியா அந்நாட்டு குற்றச்சாட்டை நிராகரித்துள்ளது.
“இந்திய நீர்மூழ்கி கப்பலை நாங்கள் விரட்டினோம் என பாகிஸ்தான் கூறுவது முற்றிலும் தவறான தகவலாகும். பாகிஸ்தான் வெளியிட்ட வீடியோ 2016 நவம்பரில் எடுக்கப்பட்டது. அவர்கள் இப்போது வீடியோவில் தேதியை மட்டும் மாற்றியுள்ளனர்,” என்று பாதுகாப்புத்துறை தகவல்கள் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story