மாவட்டம் தோறும் விபத்து மத்தியஸ்த ஆணையம் அமைக்க வேண்டும் - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுரை


மாவட்டம் தோறும் விபத்து மத்தியஸ்த ஆணையம் அமைக்க வேண்டும் - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுரை
x
தினத்தந்தி 6 March 2019 1:30 AM IST (Updated: 6 March 2019 12:45 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டம் தோறும் விபத்து மத்தியஸ்த ஆணையம் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுரை வழங்கி உள்ளது.

புதுடெல்லி,

சாலை விபத்தால் மாற்றுத்திறனாளி ஆன ஒரு வக்கீல் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு விசாரிக்கப்பட்டது. இந்த மனு மீது, நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, எஸ்.ஏ.நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பு அளித்தது.

நீதிபதிகள் கூறுகையில், “விபத்துகள் அதிகரித்தவண்ணம் இருப்பதால், விபத்து இழப்பீடு கோரும் வழக்குகளும் அதிகரித்துள்ளன. இந்த வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காண்பதற்காக, மாவட்டம் தோறும் ‘மோட்டார் விபத்து மத்தியஸ்த ஆணையம்’ அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை மத்திய அரசு ஆராய வேண்டும். இதற்காக மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்” என்றனர்.


Next Story