அரியானாவில் 5,910 வாக்காளர்கள் 100 வயது நிரம்பியவர்கள்


அரியானாவில் 5,910 வாக்காளர்கள் 100 வயது நிரம்பியவர்கள்
x
தினத்தந்தி 7 March 2019 12:38 AM IST (Updated: 7 March 2019 12:38 AM IST)
t-max-icont-min-icon

அரியானாவில் 5,910 வாக்காளர்கள் 100 வயது நிரம்பியவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது.


சண்டிகர்,

அரியானா மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம் 31-ந்தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள வாக்காளர்களில் 5,910 பேர் 100 வயது நிரம்பியவர்கள். 90 வயது முதல் 99 வயது வரை 89 ஆயிரத்து 711 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்த தகவலை அரியானா மாநில இணை தலைமை தேர்தல் அதிகாரி இந்திரஜித் நேற்று தெரிவித்தார்.

Next Story