சமூக வலைத்தளங்களில் அபிநந்தன் பெயரில் போலி கணக்குகள் -விமானப்படை எச்சரிக்கை


சமூக வலைத்தளங்களில் அபிநந்தன் பெயரில் போலி கணக்குகள்  -விமானப்படை எச்சரிக்கை
x
தினத்தந்தி 7 March 2019 6:40 PM IST (Updated: 7 March 2019 6:40 PM IST)
t-max-icont-min-icon

சமூக வலைத்தளங்களில் அபிநந்தன் பெயரில் போலி கணக்குகள் செயல்படுகிறது என விமானப்படை எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதுடெல்லி, 

இந்தியாவில் கொண்டாட்டங்களின் மத்தியில் தவறான செய்தியை பரப்புவதற்கு சமூக ஊடகங்களில் இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனின் அடையாளம் பயன்படுத்தப்படுகிறது. சிலர் தவறான செயலை மேற்கொண்டு வருகின்றனர்.  அவருடைய பெயரில் எந்தஒரு சமூக வலைதள கணக்கும் கிடையாது. ஆனால் போலி கணக்குகள் உருவாக்கப்படுகிறது. இந்நிலையில் அபிநந்தன் பெயரில் சமூக வலைத்தளங்களில் போலி கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை கூறியுள்ளது.

அபிநந்தனுக்கு சமூக வலைத்தளங்களில் அதிகாரபூர்வ கணக்கு கிடையாது. ஆனால், அவர் பெயரில் போலி கணக்குகள்  தொடங்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் எப்–16 ரக விமானத்தை அபிநந்தன் சுட்டு வீழ்த்தியது தொடர்பாக தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. ஆகவே, பொதுமக்கள் இந்த கணக்குகளை பின்தொடர வேண்டாம். இவற்றில் வைரஸ் இருக்க வாய்ப்புள்ளது என இந்திய விமானப்படை எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story