நாடு முழுவதும் கார்டு வடிவத்தில் வாகன ஆர்.சி. புத்தகம் மத்திய அரசு அறிவிப்பு


நாடு முழுவதும் கார்டு வடிவத்தில் வாகன ஆர்.சி. புத்தகம் மத்திய அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 8 March 2019 7:30 AM IST (Updated: 8 March 2019 7:30 AM IST)
t-max-icont-min-icon

நாடு முழுவதும் கார்டு வடிவத்தில் மட்டுமே வாகன ஆர்.சி. புத்தகம், ஓட்டுநர் உரிமம் ஆகியவை வழங்கப்பட இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


புதுடெல்லி, 


ஓட்டுனர் உரிமம், வாகனங்களுக்கான ஆர்.சி. புத்தகம் ஆகியவற்றை காகித வடிவத்தில் வழங்குவதை கைவிட்டு விட்டு, நாடு முழுவதும் அவற்றை பிளாஸ்டிக் கார்டு வடிவத்தில் வழங்க மத்திய தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பான புதிய விதிமுறைகளை அமைச்சகம் உருவாக்கி உள்ளது. இந்த கார்டுகளை தரமாகவும், நீடித்து உழைக்கும்படியாகவும் பி.வி.சி. அல்லது பாலி கார்பனைட்டால் மாநில அரசுகள் தயாரித்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது.

Next Story