அயோத்தி விவகாரத்தில் சமரசக் குழு: முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் வரவேற்பு
அயோத்தி விவகாரத்தில் சமரசக் குழு அமைத்ததற்கு, முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
லக்னோ,
அயோத்தி விவகாரத்துக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண சமரசக்குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டு நேற்று அறிவித்தது. இந்த நடவடிக்கைக்கு முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் வரவேற்பு தெரிவித்து உள்ளது. இது குறித்து வாரியத்தின் பொதுச்செயலாளர் மவுலானா வாலி ரெஹ்மானி கூறுகையில், ‘சமரசக்குழுவை அமைத்து சுப்ரீம் கோர்ட்டு வெளியிட்டு இருக்கும் உத்தரவு வரவேற்புக்குரியது. பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு, இது ஒரு தகுந்த நடவடிக்கையாக இருக்கும். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்’ என்று தெரிவித்தார்.
இதைப்போல அயோத்தி பிரச்சினை தொடர்பாக வழக்கு தொடர்ந்த நிரோம்கி அகாராவை சேர்ந்த மகந்த் ராம்தாசும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை வரவேற்பதாக கூறினார். எனினும் இந்த பிரச்சினையை விசாரித்த இந்து நீதிபதி ஒருவரையும் இந்த குழுவில் இணைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று குறிப்பிட்ட அவர், ஏற்கனவே இதுபோன்ற சமரச நடவடிக்கையால் பலன் கிடைக்காததால், இந்த விவகாரத்தில் விசாரணையும் தொடர வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Related Tags :
Next Story