புதிய பாகிஸ்தான் உருவாகி விட்டதாக கூறும் இம்ரான் கான் பயங்கரவாதிகள் மீது புதிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய அரசு


புதிய பாகிஸ்தான் உருவாகி விட்டதாக கூறும் இம்ரான் கான் பயங்கரவாதிகள் மீது புதிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய அரசு
x
தினத்தந்தி 9 March 2019 11:36 AM IST (Updated: 9 March 2019 11:36 AM IST)
t-max-icont-min-icon

புதிய பாகிஸ்தான் உருவாகி விட்டதாக கூறும் இம்ரான் கான் பயங்கரவாதிகள் மீது புதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

புதுடெல்லி, 

வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவிஷ்குமார் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:  புதிய பாகிஸ்தான் உருவாகி விட்டதாக கூறும் இம்ரான் கான் பயங்கரவாதிகள் மீது புதிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

எப்-16 விமானம் என்ன பயன்பாட்டிற்காக பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டது என்பதை அமெரிக்காதான் விளக்க வேண்டும்.  புல்வாமா தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகம்மது இயக்கம் காரணம் இல்லை என பாகிஸ்தான் தொடர்ந்து கூறி வருகிறது. 

இந்தியாவின் இரண்டு போர்  விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக கூறும் பாகிஸ்தான், இதுவரை ஏன் அதற்கான ஆதாரங்களை சர்வதேச ஊடகங்களிடம் வெளியிடவில்லை. அபிநந்தன் எப்- 16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கான  மின்னணு ஆதாரங்கள் இந்தியாவிடம் உள்ளன. 

நிரவ் மோடியை இந்தியா கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  இந்திய அரசின் கோரிக்கை தொடர்பாக பிரிட்டன் அரசு இதுவரை பதிலளிக்கவில்லை. பிரிட்டன் அரசுடன் தொடர்ந்து பேசி வருகிறோம்.” இவ்வாறு அவர் கூறினார். 

Next Story