பாகிஸ்தான் விமானத்தை அபிநந்தன் சுட்டு வீழ்த்தியதற்கு ஆதாரம் உள்ளது - மத்திய அரசு அறிவிப்பு


பாகிஸ்தான் விமானத்தை அபிநந்தன் சுட்டு வீழ்த்தியதற்கு ஆதாரம் உள்ளது - மத்திய அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 9 March 2019 9:30 PM GMT (Updated: 9 March 2019 8:41 PM GMT)

பாகிஸ்தான் விமானத்தை அபிநந்தன் சுட்டு வீழ்த்தியதற்கு ஆதாரம் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

புலவாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கிற வகையில் இந்திய போர் விமானங்கள் கடந்த மாதம் 26-ந் தேதி பாகிஸ்தானுக்கு போய் லேசர் குண்டுகள் போட்டு, அங்கிருந்த பயங்கரவாத முகாம்களை அழித்தன.

அதற்கு அடுத்த நாளே பாகிஸ்தானின் ‘எப்-16’ ரக போர் விமானங்கள் இந்தியாவில் தாக்குதல் நடத்த அத்துமீறி நுழைந்தன.

உஷார் நிலையில் இருந்த இந்திய விமானப்படை, அந்த விமானங்களை விரட்டியடித்தது. அப்போது இந்தியாவின் ‘மிக்-21 பைசன்’ விமானத்தை ஓட்டிச்சென்ற இந்திய விமானப்படை விமானி அபிநந்தன், பாகிஸ்தானின் ஒரு விமானத்தை சுட்டு வீழ்த்தினார் என தகவல்கள் வெளியாகின.

இதற்கு ஆதாரம் இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுபற்றி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் நேற்று கூறுகையில், “இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் வர்த்தமான், பாகிஸ்தானின் எப்-16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கு நேரில் கண்ட சாட்சிகள் உள்ளனர். மின்னணு ஆதாரமும் உள்ளது” என குறிப்பிட்டார்.


Next Story