நாடாளுமன்றத் தேர்தலுடன் 4 மாநில சட்டசபைத் தேர்தல், காஷ்மீரில் சட்டசபைத் தேர்தல் கிடையாது
நாடாளுமன்றத் தேர்தலுடன் 4 மாநில சட்டசபைத் தேர்தல் நடத்தப்படுகிறது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பதவிக்காலம் முடிய உள்ள சிக்கிம் (மே 27-ந் தேதி), ஆந்திரா (ஜூன் 18-ந் தேதி), ஒடிசா (ஜூன் 11-ந் தேதி), அருணாசலபிரதேசம் (ஜூன் 1-ந் தேதி) ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களும் நாடாளுமன்ற தேர்தலுடன் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்போது இம்மாநிலங்களில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் போது சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுடன் காஷ்மீர் மாநிலத்துக்கு சட்டசபை தேர்தல் நடத்தப்படலாம் என பார்க்கப்பட்டது. ஆனால் காஷ்மீரில் சட்டசபைத் தேர்தல் நடத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story