நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை - சரத்பவார்


நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை  - சரத்பவார்
x
தினத்தந்தி 11 March 2019 4:17 PM IST (Updated: 11 March 2019 4:17 PM IST)
t-max-icont-min-icon

வரும் நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

16-வது நாடாளுமன்றத்தின் பதவி காலம் வருகிற ஜூன் 3-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து, 17-வது நாடாளுமன்ற தேர்தல் தேதி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா நேற்று டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் நாடாளுமன்ற தேர்தல் அட்டவணையை வெளியிட்டார்.  அதன்படி, இந்தியா முழுவதும் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஏப்ரல் 11-ந் தேதி தொடங்கி மே மாதம் 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

நாடாளுமன்ற தேர்தலில்  பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது தொகுதியில்  போட்டியிட முனைப்பு காட்டி வருகின்றனர்.  காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி  அமேதி தொகுதியிலும்,  காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி ரேபரேலி  தொகுதியிலும் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் தொகுதியில் மன்மோகன் சிங் போட்டியிட  தயக்கம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ்  மெய்ன்புரி தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார். பாஜகவில் பிரதமர் மோடி போட்டியிடும் தொகுதி இன்னும் முடிவாகவில்லை.

இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறுகையில்,

நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை. நான் ஏற்கனவே 14 முறை தேர்தலில் போட்டியிட்டுள்ளேன்.  எனக்கு பதில் எனது குடும்ப உறுப்பினர்கள் 2 பேர் தேர்தலில் போட்டியிட உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story