வங்கி மோசடி வழக்கு: நிரவ் மோடி மீது கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்


வங்கி மோசடி வழக்கு: நிரவ் மோடி மீது கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்
x
தினத்தந்தி 12 March 2019 12:00 AM IST (Updated: 11 March 2019 10:54 PM IST)
t-max-icont-min-icon

வங்கி மோசடி வழக்கில் நிரவ் மோடி மீது, கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

மும்பை,

பஞ்சாப் நே‌ஷனல் வங்கியை ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய வைர வியாபாரி நிரவ் மோடி உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. இவ்வழக்கில், கடந்த ஆண்டு மே மாதம் மும்பை தனிக்கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், நிரவ் மோடி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறை மும்பை கோர்ட்டில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில், நிரவ் மோடியின் மனைவி அமி, பணத்தை கையாண்ட விதம் குறித்து கூறப்பட்டுள்ளது. புதிய ஆதாரங்களையும், தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின் கீழ் புதிய குற்றச்சாட்டுகளையும் அமலாக்கத்துறை கூறியுள்ளது.


Next Story