மான் வேட்டை வழக்கு: சயீப் அலிகான் உள்ளிட்டோருக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்
மான் வேட்டை வழக்கு தொடர்பாக, சயீப் அலிகான் உள்ளிட்டோருக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
ஜோத்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கடந்த 1998-ம் ஆண்டு படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர்கள் சல்மான்கான், சயீப் அலிகான், நடிகைகள் தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் கோத்தாரி ஆகியோர் 2 அரிய வகை மான்களை வேட்டையாடினர். இது தொடர்பான வழக்கில் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த விசாரணை நீதிமன்றம், மீதமுள்ள 4 பேரையும், உள்ளூர்வாசி ஒருவரையும் விடுவித்தது.
இதை எதிர்த்து ராஜஸ்தான் மாநில அரசு ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மனோஜ் கார்க், இந்த விவகாரத்தில் 8 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு சயீப் அலிகான் உள்ளிட்ட 4 பேருக்கும், உள்ளூர்வாசிக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த வழக்கில் தண்டனை பெற்ற சல்மான்கான் தற்போது ஜாமீனில் இருப்பதுடன், தண்டனையை எதிர்த்து செசன்ஸ் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story