ஒடிசாவில் அனைத்து நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டி - பிஜூ ஜனதாதள தலைவர் நவீன் பட்நாயக் அறிவிப்பு


ஒடிசாவில் அனைத்து நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டி - பிஜூ ஜனதாதள தலைவர் நவீன் பட்நாயக் அறிவிப்பு
x
தினத்தந்தி 12 March 2019 4:15 AM IST (Updated: 12 March 2019 2:48 AM IST)
t-max-icont-min-icon

ஒடிசாவில் அனைத்து நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடுவதாக பிஜூ ஜனதாதள தலைவர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

புவனேசுவரம்,

ஒடிசா மாநிலத்தில் உள்ள 21 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், 147 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் பிஜூ ஜனதாதளம் கட்சி 118 தொகுதிகளில் வெற்றி பெற்று, அக்கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் முதல்-மந்திரியாக உள்ளார். அதேபோல 21 நாடாளுமன்ற தொகுதிகளில் 20 இடங்களில் அக்கட்சி வெற்றி பெற்றது.

நடைபெற உள்ள தேர்தலிலும் தனது கட்சி அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் என்று கட்சியின் தலைவரும், முதல்-மந்திரியுமான நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

மாநிலத்தில் மொத்தம் உள்ள 147 சட்டமன்ற தொகுதிகளிலும், 21 நாடாளுமன்ற தொகுதிகளிலும் பிஜூ ஜனதா தளம் வேட்பாளர்களை நிறுத்தும். நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் எங்கள் கட்சி அமோக வெற்றி பெறும். இவ்வாறு நவீன் பட்நாயக் கூறினார்

Next Story