பாராளுமன்ற தேர்தல் - 2019 தேர்தலுக்கு எவ்வளவு செலவாகும்? - ஆய்வறிக்கை வெளியீடு
17-வது நாடாளுமன்ற தேர்தலுக்கு கடந்த ஆண்டை விட எவ்வளவு அதிகம் செலவாகும் என ஆய்வறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
17-வது மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், கிட்டத்தட்ட 1,866 அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆயிரக்கணக்கான வேட்பாளர்களுக்கு 900 மில்லியன் மக்கள் வாக்களிக்க காத்து இருக்கின்றனர்.
தேர்தலில் தான் கணக்கில்வராத பணம், கணக்கில் வந்த பணம், கருப்பு பணம், சட்டத்திற்கு உட்பட்ட பணம், சட்டவிரோதமான பணம் என பணம் வாரி இறைக்கப்படும்.
கடந்த 2014-ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 35 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டதாக டெல்லியை சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனமான ஊடக ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
தேர்தலுக்கு உத்தியோகபூர்வ மதிப்பீடு ரூ.7,000-8,000 கோடி மட்டுமே இருந்த போதிலும், மீதமுள்ள 27,000 கோடி ரூபாய் கணக்கில் வராத பணமாக இருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது.
வரும் பாராளுமன்ற தேர்தலில் ரூ.50 ஆயிரம் கோடி முதல் ரூ.60 ஆயிரம் கோடி வரை செலவிடப்படும் என இந்த ஆராய்ச்சி மையம் மதிப்பிட்டு உள்ளது.
2014-ஆம் ஆண்டு தேர்தலில் 533 பெரிய பாராளுமன்ற தொகுதிகளுக்கு வேட்பாளர் ஒருவர் ரூ.70 லட்சமும், சிறிய பாராளுமன்ற தொகுதிகளுக்கு ரூ.54 லட்சமும் செலவிடலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.
வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள வாக்குமூலத்தின் படி சராசரியாக ஒரு வேட்பாளர் ரூ.25 லட்சம் மட்டுமே செலவு செய்ததாக கூறி உள்ளார். ஆணையம் குறிப்பிட்ட தொகையை விட இது குறைவாக உள்ளது. 2014 தேர்தல்களில் வேட்பாளர்களின் செலவினம், தேர்தல் ஆணையம் நிர்ணயித்திருந்த தொகுப்பில் 58 சதவீதமாக இருந்தது.
அறிவிக்கப்பட்ட தொகையை விட 10 எம்.பி.க்கள் அதிகமாக செலவு செய்ததாக குறிப்பிட்டு உள்ளனர். பாரதீய ஜனதாவில் 4 எம்பிக்களும், திரிணாமுல் காங்கிரசில் 2 எம்பிக்களும், காங்கிரஸ், இந்திய தேசியவாத காங்கிரஸ், யூனியன் முஸ்லீம் லீக், அதிமுக ஆகிய கட்சிகளில் தலா ஒரு எம்.பி.யும் அதிகமாக செலவு செய்ததாக குறிப்பிட்டு உள்ளனர்.
20 அல்லது அதற்கு மேற்பட்ட பாராளுமன்ற தொகுதிகளை கொண்ட மாநிலங்களில் கேரளாவின் சராசரி தேர்தல் செலவினங்கள் ரூ.52,09,040, ராஜஸ்தான் ரூ. 47,89,702, மகாராஷ்டிரா ரூ. 46,93,421, குஜராத் ரூ. 45,91,757, மேற்கு வங்கம் ரூ. 44,05,462.
அசாம் கலியாபூர் தொகுதியிலிருந்து காங்கிரஸ் எம்.பியாக தேர்வான கவுராவ் கோகாய் 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் ரூ.70,00,000 வரம்பை மீறிய ஒரே எம்.பி. ஆவார். கோகாய் ரூ.82,40,641, செலவு செய்து உள்ளதாக கணக்கு காட்டி உள்ளார்.
ஆய்வு கருத்துப்படி, ஒரு சட்டமன்ற வேட்பாளருக்கு ரூ. 1-2 கோடியும் மற்றும் லோக்சபா தேர்தலில் வேட்பாளருக்கு 6-7 கோடி ரூபாய் வெற்றி பெறும் வாய்ப்பை வலுப்படுத்தும் நோக்கில் செலவிட வேண்டும் என்று ஆய்வு கூறுகிறது.
16 பாராளுமன்ற தேர்தல்களிலும் இந்திய தேர்தல் ஆணையம் சராசரியாக ஒரு வேட்பாளருக்கு செலவு விவரம் கீழே குறிப்பிடப்பட்டு உள்ளது. சராசரியாக ஒருவருக்கு 60 பைசாவில் ஆரம்பித்த செலவு தற்போது ரூ.42 வந்து உள்ளது.
1952-ஆம் ஆண்டு முதல் பாராளுமன்ற தேர்தல் நடந்தபோது ரூ.10.45 கோடி செலவானது. அப்போது 17,32,12,343 வாக்காளர்கள் இருந்தனர். சராசரியாக ஒரு நபருக்கு வாக்களிக்க செலவு என்பது 60 பைசாவாக இருந்தது.
2-வது பாராளுமன்ற தேர்தல் 1957-ஆம் ஆண்டில் மொத்த வாக்காளர்கள் 19,36,52,179 ஆக இருந்தது. அப்போது மொத்த தேர்தல் செலவு ரூ.5.90 கோடியாக இருந்தது. சராசரியாக ஒரு வாக்காளருக்கான செலவு 30 பைசாவாக குறைந்தது.
3-வது பாராளுமன்ற தேர்தல் 1962-ஆம் ஆண்டில் மொத்த வாக்காளர்கள் 21,63,61,569 இருந்தனர். தேர்தல் செலவு ரூ.7.32 கோடியாக இருந்தது. அப்போது சராசரியாக ஒரு வாக்காளருக்கான செலவு கடந்த தேர்தலைப் போலவே சராசரி 30 பைசாவாக இருந்தது.
4-வது பாராளுமன்ற தேர்தல் 1967 ஆம் ஆண்டில் தேர்தல் செலவு ரூ.10.80 கோடியாக இருந்தது. அப்போது மொத்த வாக்காளர்கள் 25,02,07,401. சராசரி வாக்காளர் ஒருவரின் தேர்தல் செலவு 40 பைசாவாக இருந்தது.
5-வது பாராளுமன்ற தேர்தல் 1971-ஆம் ஆண்டில் 27,41,89,131 வாக்காளர்களுக்கு ரூ.11.61 கோடி செலவானது. சராசரி வாக்காளர் ஒருவரின் தேர்தல் செலவு 40 பைசாவாக இருந்தது.
6-வது பாராளுமன்ற தேர்தல் 1977-ஆம் ஆண்டில் ரூ.23.04 கோடியில் நடைபெற்றது. மொத்த வாக்காளர்கள் 32,11,74,327 சராசரி ஒரு வாக்காளருக்கு 70 பைசா செலவாகி உள்ளது.
7-வது பாராளுமன்ற தேர்தல் 1980-ஆம் ஆண்டு நடைபெற்றபோது சராசரியாக ஒரு வாக்காளரின் செலவு கடந்த தேர்தலை விட 2 மடங்கு உயர்ந்து ரூ.1.50 ஆக இருந்தது. அப்போது மொத்த வாக்காளர்கள் 35,62,05,329 ஆக இருந்தது. மொத்த செலவும் கடந்த தேர்தலை விட 2 மடங்காக ரூ.54.77 கோடியாக உயர்ந்தது. ஒரு வாக்காளருக்கு ஆகும் செலவு ரூ. 1.50 ஆக இருந்தது.
8-வது பாராளுமன்ற தேர்தல் 1984-85 ஆம் ஆண்டில் 40,03,75,333 மொத்த வாக்காளர்களுக்கு ரூ.81.51 கோடி செலவிடப்பட்டது. ஒரு வாக்காளருக்கு ஆகும் செலவு 2 ரூபாயாக இருந்தது.
9-வது பாராளுமன்ற தேர்தல் 1989-ஆம் ஆண்டில் கடந்த தேர்தலைவிட செலவு 2 மடங்காக ரூ.154.22 கோடி உயர்ந்தது. மொத்த வாக்காளர் எண்ணிக்கை 49,89,06,129 ஆக இருந்தது. சராசரி ஒரு வாக்காளருக்கு ஆகும் செலவு ரூ.3.1 ஆக இருந்தது.
10-வது பாராளுமன்ற தேர்தல் 1991-92-ஆம் ஆண்டிலும் கடந்த தேர்தலைவிட செலவு 2 மடங்காக ரூ.359.1 கோடி உயர்ந்தது. மொத்த வாக்காளர் எண்ணிக்கை 51,15,33,598 ஆக இருந்தது. சராசரியாக ஒரு வாக்காளருக்கு ஆகும் செலவு 2 மடங்காக ரூ.7 ஆக உயர்ந்தது.
11-வது பாராளுமன்ற தேர்தல் 1996-ஆம் ஆண்டில் நடக்கும்போது மொத்த செலவு ரூ.597.34 கோடியாகும். மொத்த வாக்காளர்கள் 59,25,72,288 ஆக இருந்தது. சராசரியாக ஒரு வாக்காளருக்கு ஆகும் செலவு ரூ.10 ஆக இருந்தது.
12-வது பாராளுமன்ற தேர்தல் 1998-ஆம் ஆண்டு நடக்கும்போது மொத்த செலவு ரூ.666.22 கோடியாக இருந்தது. மொத்த வாக்காளர்கள் 60,58,80,192 ஆக இருந்தது. சராசரியாக ஒரு வாக்காளருக்கு ஆகும் செலவு ரூ.11 ஆக இருந்தது.
13-வது பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டே 1999-ல் நடைபெற்றது. இதற்கான செலவு ரூ.947.68 கோடி ரூபாயாகும். மொத்த வாக்காளர்கள் 61,95,36,847 ஆக இருந்தது. சராசரியாக வாக்காளருக்கு ஆகும் செலவு ரூ.15 ஆக இருந்தது.
இந்தியா நடத்திய ஆய்வில் வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் விளம்பரங்களுக்கு 26 பில்லியன் ரூபாய் செலவிடப்படும் என கூறியுள்ளது. இது கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலில் விளம்பரங்களுக்கு செலவிட்ட (12 பில்லியன் ரூபாய்) தொகையைவிட இரண்டு மடங்கு அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கூறப்பட்டுள்ள ஆய்வுகளை வைத்து பார்க்கும் போது வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தல்தான் உலக அளவில் நடைபெறும் தேர்தலில் அதிக செலவுடன் நடைபெறவிருக்கும் தேர்தல் என தெரியவந்துள்ளது.
2019 நாடாளுமன்றத் தேர்தல் செலவுகள் குறித்து சென்டர் ஃபார் மீடியா ஸ்டெடீஸ் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் வரும் 2019 தேர்தலுக்கு 7 பில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 4,87,86,50,00,000.00) செலவாகும் என்று கணித்துள்ளது. இது கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலுக்கு செலவான 6.5 பில்லியன் டாலரை விட அதிகமானது என்று தெரிவித்துள்ளது. மேலும் 2019 தேர்தலின் செலவு 2014 நாடாளுமன்றத் தேர்தலின் செலவைவிட 40% அதிகமானது என்கிறது. கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் 5 பில்லியன் டாலர் செலவானது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இந்த ஆய்வில் சமூக வலைத்தளங்களில் செய்யப்படும் செலவுகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சமூக வலைத்தளங்களில் வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 50 பில்லியன் டாலர் செலவாகும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சமூக வலைத்தளங்களில் 2.5 பில்லியன் டாலர் செலவிடப்பட்டது. மேலும் ஸேனித் இந்தியா நடத்திய ஆய்வில் வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் விளம்பரங்களுக்கு 26 பில்லியன் ரூபாய் செலவிடப்படும் எனக் கூறியுள்ளது. இது கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலில் விளம்பரங்களுக்கு செலவிட்ட (12 பில்லியன் ரூபாய்) தொகையைவிடஇரண்டு மடங்கு அதிகமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கூறப்பட்டுள்ள ஆய்வுகளை வைத்து பார்க்கும் போது வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தல்தான் உலக அளவில் நடைபெறும் தேர்தலில் அதிக செலவுடன் நடைபெறவிருக்கும் தேர்தல் எனத் தெரியவந்துள்ளது.
Related Tags :
Next Story