மோடி அரசு வாக்குறுதியை காப்பாற்றவில்லை - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு


மோடி அரசு வாக்குறுதியை காப்பாற்றவில்லை - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 12 March 2019 2:53 PM GMT (Updated: 12 March 2019 2:53 PM GMT)

மோடி அரசு கொடுத்த வாக்குறுதியை மோடி அரசு காப்பாற்றவில்லை என்று காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பிரியங்கா குற்றம் சாட்டினார்.


குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. 1961–ம் ஆண்டுக்கு பிறகு, குஜராத் மாநிலத்தில் காரிய கமிட்டி கூட்டம் நடப்பது, இதுவே முதல்முறை ஆகும். காங்கிரஸ் பொதுச்செயலாளரும், சோனியா காந்தியின் மகளுமான பிரியங்காவும் கலந்து கொண்டார்.காங்கிரஸ் பொதுச்செயலாளராக ஆன பிறகு, அவர் குஜராத்தில் பங்கேற்ற முதலாவது அரசியல் பொதுக்கூட்டம் இதுவே ஆகும். கூட்டத்தில் பேசிய போது பிரதமர் மோடியை விமர்சனம் செய்தார்.

பிரியங்கா பேசுகையில், நீங்கள்தான் உங்களுடைய எதிர்காலத்தை முடிவு செய்யப் போகிறீர்கள். மக்கள் தேவையில்லாத பிரச்சினைகளால் கவனத்தை திசை திருப்ப வேண்டாம். உங்களுடைய வாக்குதால் ஆயுதம், உங்களால்தான் இந்த தேசத்தை காப்பாற்ற முடியும். இன்று தேசத்தில் நடக்கும் சம்பவங்கள் என்னை மிகவும் கவலையடைய செய்கிறது. நம்முடைய அரசியல் சட்ட அமைப்புகள் ஒவ்வொன்றும் அழிக்கப்படுகின்றன. எங்கு பார்த்தாலும் வெறுப்புணர்வு பரப்பப்படுகிறது. 

இந்த தேசத்தை பாதுகாப்பதைவிட நமக்கு பெரிய பணி எதுவும் கிடையாது. இதற்கான பணியை ஒன்றாக செய்வோம். கோடிக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாக பிரதமர் மோடி வாக்குறுதியை கொடுத்தார். ஆனால் அதனை காப்பாற்றவில்லை.  2 கோடி வேலை வாய்ப்பை எங்கே? பெண்களுக்கான பாதுகாப்பு எங்கே? ரூ. 15 லட்சம் எங்கே? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். 


Next Story