மக்களவை தேர்தலில் மன்மோகன் சிங் போட்டியிட மாட்டார் -பஞ்சாப் முதல்-மந்திரி தகவல்


மக்களவை தேர்தலில் மன்மோகன் சிங் போட்டியிட மாட்டார் -பஞ்சாப் முதல்-மந்திரி தகவல்
x
தினத்தந்தி 12 March 2019 11:09 PM IST (Updated: 12 March 2019 11:09 PM IST)
t-max-icont-min-icon

மக்களவை தேர்தலில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் போட்டியிடமாட்டார் என்று பஞ்சாப் முதல்-மந்திரி அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார். #ManmohanSingh

சண்டிகர்,

அசாம் மாநிலத்தின் மாநிலங்களவை உறுப்பினராக மன்மோகன் சிங் கடந்த 1991-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். அவரது பதவிக்காலம் ஜூன் 14-ந் தேதியுடன் முடிவடைகிறது.

இந்நிலையில், மன்மோகன் சிங்கை சந்தித்த பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் அவரிடம் நலம் விசாரித்தார். அப்போது, பஞ்சாபில் போட்டியிடுவது குறித்து மன்மோகனிடம் எடுத்துரைக்கப்பட்டது. இதில் தனக்கு விருப்பம் இல்லை என்று மன்மோகன் சிங் அமரிந்தரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.  

இதுகுறித்து பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் செய்தியாளர்கள் சந்திப்பில், “மன்மோகன் சிங் இந்த தேர்தலில் போட்டியிட மாட்டார்” என்று தெரிவித்தார். மன்மோகன் சிங் இதுவரை மாநிலங்களவை உறுப்பினராக மட்டுமே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாபில் மொத்தம் 13 மக்களவை தொகுதிகள் உள்ளன. இங்கு வரும் மே 19-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. முடிவுகள் மே 23-ந் தேதி அறிவிக்கப்படுகின்றன.

Next Story