கட்சியில் இருந்து நீக்கப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., பா.ஜனதாவில் சேர்ந்தார்


கட்சியில் இருந்து நீக்கப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., பா.ஜனதாவில் சேர்ந்தார்
x
தினத்தந்தி 13 March 2019 12:00 AM IST (Updated: 12 March 2019 11:22 PM IST)
t-max-icont-min-icon

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., பா.ஜனதாவில் இணைந்தார்.

புதுடெல்லி,

மேற்கு வங்காள மாநிலம் போல்பூர் (தனி) தொகுதியின் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அனுபம் ஹஸ்ரா. இவரும், அக்கட்சியின் மற்றொரு எம்.பி.யான சவுமித்ரா கானும் கட்சி விரோத நடவடிக்கைக்காக கடந்த ஜனவரி மாதம் திரிணாமுல் காங்கிரசில் இருந்து நீக்கப்பட்டனர்.

இந்நிலையில், அனுபம் ஹஸ்ரா நேற்று பா.ஜனதாவில் சேர்ந்தார். டெல்லியில், பா.ஜனதாவின் மேற்கு வங்காள பொறுப்பாளர் கைலாஷ் விஜயவர்கியா முன்னிலையில் அவர் பா.ஜனதாவில் இணைந்தார். காங்கிரஸ் எம்.எல்.ஏ. துலால் சந்திராவும் பா.ஜனதாவில் சேர்ந்தார். அப்போது, திரிணாமுல் காங்கிரசில் இருந்து ஏற்கனவே பா.ஜனதாவுக்கு தாவிய முன்னாள் மத்திய மந்திரி முகுல் ராயும் உடன் இருந்தார்.


Next Story