தேசிய செய்திகள்

காங்கிரஸ் தலைவர்களை புகழ்ந்த ஹபீஸ் சயீது, புதிய வீடியோவை பா.ஜனதா வெளியிட்டது + "||" + now bjp releases a video of hafiz saeed speaking in appreciation of cong leaders

காங்கிரஸ் தலைவர்களை புகழ்ந்த ஹபீஸ் சயீது, புதிய வீடியோவை பா.ஜனதா வெளியிட்டது

காங்கிரஸ் தலைவர்களை புகழ்ந்த ஹபீஸ் சயீது, புதிய வீடியோவை பா.ஜனதா வெளியிட்டது
காங்கிரஸ் தலைவர்களை புகழ்ந்த ஹபீஸ் சயீது புதிய வீடியோவை பா.ஜனதா வெளியிட்டு காங்கிரசுக்கு பதிலடி கொடுத்துள்ளது.
புதுடெல்லி, 

ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்க தலைவர் மசூத் அசாரை ‘மசூத் அசார்ஜி’ என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதாகவும், மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜமாத் உத் தவா தலைவர் ஹபீஸ் சயீதை ‘ஹபீஸ்ஜி’ என்று மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறியதாகவும் இரு கட்சிகளும் மாறி, மாறி குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில், இதற்கு பா.ஜனதா தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், ஹபீஸ் சயீதின் வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளது.

அதில், ‘‘காங்கிரஸ் தலைவர்கள் சிலர் அறிவுடன் பேசுகிறார்கள். எல்லாவற்றுக்கும் பாகிஸ்தானை குறை கூறுவதை நிறுத்துங்கள் என்று பா.ஜனதாவிடம் காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ளனர். முதலில் உங்களை பாருங்கள். காஷ்மீரில் பா.ஜனதா என்ன செய்திருக்கிறது என்று பாருங்கள்’’ என்று ஹபீஸ் சயீது பேசியுள்ளார்.

இந்த வீடியோவை குறிப்பிட்டுத்தான் ரவிசங்கர் பிரசாத் பேசியதாகவும், ஹபீஸ் சயீதுடனான காங்கிரசின் உறவு குறித்து காங்கிரஸ் தலைவர்கள்தான் பதில் கூற வேண்டும் என்றும் பா.ஜனதா கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. காங்கிரசிலிருந்து விலகிய பிரியங்கா சதூர்வேதி சிவசேனாவில் இணைந்தார்
காங்கிரசிலிருந்து விலகிய பிரியங்கா சதூர்வேதி சிவசேனாவில் இணைந்துள்ளார்.
2. தேசிய செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி காங்கிரசில் இருந்து விலகல்
தேசிய செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி காங்கிரசில் இருந்து விலகி உள்ளார்.
3. திருடர்கள் அனைவரின் பெயரும் மோடி : ராகுல் காந்தி மீது வழக்கு தொடர போவதாக லலித் மோடி மிரட்டல்
திருடர்கள் அனைவரின் பெயரும் மோடி என்று இருக்கிறது என கூறிய ராகுல் காந்தி மீது வழக்கு தொடர உள்ளதாக லலித் மோடி மிரட்டல் விடுத்து உள்ளார்.
4. கடனை செலுத்த முடியாத விவசாயிகளை சிறைக்கு அனுப்பமாட்டோம் -ராகுல் காந்தி
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கடனை திரும்ப செலுத்த முடியாத விவசாயிகளை சிறைக்கு அனுப்பமாட்டோம் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
5. விவசாய கடன், நீட் தேர்வை ரத்து செய்ய மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரவேண்டும் - நாராயணசாமி திட்டவட்டம்
விவசாயகடன், நீட் தேர்வை ரத்து செய்ய மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரவேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.