மத்திய மந்திரிசபை ஒப்புதலை அடுத்து நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு, ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது


மத்திய மந்திரிசபை ஒப்புதலை அடுத்து நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு, ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது
x
தினத்தந்தி 14 March 2019 2:02 AM IST (Updated: 14 March 2019 2:02 AM IST)
t-max-icont-min-icon

மத்திய மந்திரிசபை ஒப்புதலை அடுத்து நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு, ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது.

புதுடெல்லி,

17-வது நாடாளுமன்ற தேர்தலுக்கு 7 கட்ட தேர்தல் அறிவிப்பை தேர்தல் கமிஷன் கடந்த 10-ந் தேதி வெளியிட்டது. இதன்படி அடுத்த மாதம் 11-ந் தேதி தொடங்கி மே மாதம் 19-ந் தேதி வரை நாடு முழுவதும் 543 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 14-ன் கீழ், முறைப்படி தேர்தல் அறிவிப்பை மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் அனுப்பியது. அந்த அறிவிப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று கூடிய மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்து, தேர்தல் அறிவிக்கை வெளியிடுவதற்காக ஜனாதிபதிக்கு அனுப்பியது.

இதையடுத்து தேர்தல் அறிவிக்கையை ஜனாதிபதி முறைப்படி வெளியிடுவார். அப்போது 17-வது நாடாளுமன்ற தேர்தல் நடைமுறைகள் தொடங்கி விடும்.

Next Story