நாடாளுமன்ற தொகுதி ஒதுக்காததால் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பா.ஜனதாவில் சேர்ந்தார்


நாடாளுமன்ற தொகுதி ஒதுக்காததால் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பா.ஜனதாவில் சேர்ந்தார்
x
தினத்தந்தி 15 March 2019 2:00 AM IST (Updated: 15 March 2019 1:12 AM IST)
t-max-icont-min-icon

திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான அர்ஜூன் சிங், நாடாளுமன்ற தொகுதி தனக்கு ஒதுக்காததால் பா.ஜனதாவில் இணைந்தார்.

புதுடெல்லி,

மேற்குவங்காள மாநில திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும், எம்.எல்.ஏ.வுமான அர்ஜூன் சிங் நாடாளுமன்ற தேர்தலில் அங்குள்ள பராக்போர் தொகுதியில் போட்டியிட கட்சி மேலிடத்தில் வாய்ப்பு கேட்டார். ஆனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அந்த தொகுதியில் மீண்டும் திரிவேதி என்பவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதனால் அதிருப்தி அடைந்த அர்ஜூன் சிங் நேற்று டெல்லியில் பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் அக்கட்சியில் சேர்ந்தார். அர்ஜூன் சிங் கூறும்போது, “இந்திய விமானப்படையின் வான் தாக்குதல் குறித்து மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. தொகுதிக்கே வராத திரிவேதி மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். ஆனால் அவருக்கே மீண்டும் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

Next Story