ஈபிஎஸ்-ஓபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு


ஈபிஎஸ்-ஓபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
x
தினத்தந்தி 15 March 2019 5:57 AM GMT (Updated: 15 March 2019 5:57 AM GMT)

ஈபிஎஸ்-ஓபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதற்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இரட்டை இலை வழக்கில், அண்மையில் டெல்லி உயர் நீதிமன்றம் இரட்டை இலை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமை அதிமுகவுக்குத்தான் சொந்தம் என்று தீர்ப்பளித்து டிடிவி தினகரன் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்திருந்தது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் டிடிவி தினகரன், சசிகலா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், இரட்டை இலை சின்னம் ஓ பன்னீர்செல்வம் - எடப்பாடி கே பழனிசாமி தரப்புக்கு ஒதுக்கியதற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதேவேளையில், குக்கர் சின்னம் தனக்கு ஒதுக்க வேண்டும் என்ற டிடிவி தினகரனின் கோரிக்கை தொடர்பாக, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டது. 

Next Story