3 தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக 2 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு


3 தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக 2 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும்:  தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
x
தினத்தந்தி 15 March 2019 6:27 AM GMT (Updated: 15 March 2019 6:27 AM GMT)

3 தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக 2 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

மக்களவை தேர்தலுடன் தமிழகத்தில் 18 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது.

கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதால் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த முடியாது என தேர்தல் கமிஷன் கைவிரித்து விட்டது. ஆனால் தி.மு.க. தரப்பில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

3 தொகுதிகளுக்கும்  இடைத்தேர்தல் நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம்,  ”3 தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக 2 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும்” என தேர்தல் ஆணையத்திற்கு  உத்தரவிட்டுள்ளது. 

Next Story