தேசிய செய்திகள்

நீங்க முதல்வராக வேண்டும்... நீங்க பிரதமராக வேண்டும்... உதயமானது புதிய கூட்டணி + "||" + Want Pawan Kalyan To Become Chief Minister Says Mayawati. His Response

நீங்க முதல்வராக வேண்டும்... நீங்க பிரதமராக வேண்டும்... உதயமானது புதிய கூட்டணி

நீங்க முதல்வராக வேண்டும்... நீங்க பிரதமராக வேண்டும்... உதயமானது புதிய கூட்டணி
பவன் கல்யாண் ஆந்திர மாநிலத்தின் முதல்வராக வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.
ஆந்திர மாநில முன்னணி நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணியை அமைத்துள்ளார். ஆந்திரா, தெலுங்கானாவில் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இக்கூட்டணி இணைந்து போட்டியிடுகிறது. ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலிலும் கவனம் செலுத்துகிறது. கூட்டணி அறிவிப்பு லக்னோவில் அறிவிக்கப்பட்டுள்ளது. பவன் கல்யாண் ஆந்திராவில் பா.ஜனதாவுடன் கைகோர்க்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அக்கட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார். இப்போது பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணியை ஏற்படுத்தியுள்ளார்.

 கூட்டணியை அறிவித்து மாயாவதி பேசுகையில், ஆந்திர மாநில மக்கள் 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும், மாநில சட்டசபைத் தேர்தலிலும் மாற்றத்தை விரும்புகிறார்கள். புதியவர்கள் அரசுக்கு வரவேண்டும் என்பது மக்களின் ஆர்வமாக உள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ஜனசேனா மற்றும் பிற பிராந்திய கட்சிகளுடன் நாங்களும் இணைந்து போட்டியிடுகிறோம் என்றார். கூட்டணி பேச்சுவார்த்தையின் போது இரு தலைவர்களும் ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொண்டனர். மாயாவதி பேசுகையில் நீங்கள் ஆந்திர மாநில முதல்வராக வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்த பவன் கல்யாண், நீங்கள் இந்தியாவின் பிரதமராக வேண்டும் என மாயாவதியிடம் தெரிவித்துள்ளார். நீங்கள் பிரதமர் ஆவதுதான் எங்களுடைய விருப்பமாகும் என குறிப்பிட்டுள்ளார். சந்திரபாபு நாயுடு பா.ஜனதாவிற்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொண்டார். சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் இதில் உடன்படவில்லை. இப்போது பகுஜன் சமாஜ் கட்சி அவருக்கு எதிராகவே பவன் கல்யாணுடன் கைகோர்க்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ஒரே தேசம், ஒரே தேர்தலுக்கு பின்னால் பா.ஜனதாவின் மிகப்பெரிய சதி - மாயாவதி குற்றச்சாட்டு
ஒரே தேசம், ஒரே தேர்தலுக்கு பின்னால் பா.ஜனதாவின் மிகப்பெரிய சதிதிட்டம் உள்ளது என மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.
2. இடைத்தேர்தலில் நாங்களும் தனியாக போட்டியிடுவோம் - அகிலேஷ் யாதவ் அறிவிப்பு
பகுஜன் சமாஜ் கட்சியுடனான கூட்டணி முடிவுக்கு வந்தால் நாங்களும் தனித்தே போட்டியிடுவோம் என அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.
3. உத்தரபிரதேசத்தில் மாயாவதி கட்சி தலைவர் சுட்டுக்கொலை
உத்தரபிரதேசத்தில் மாயாவதி கட்சியின் தலைவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
4. ஓட்டு எண்ணிக்கைக்கு பிறகு அடுத்தகட்ட முடிவு எடுக்க மாயாவதி திட்டம்
ஓட்டு எண்ணிக்கைக்கு பிறகு அடுத்தகட்ட முடிவு எடுக்க மாயாவதி திட்டமிட்டுள்ளார்.
5. டெல்லியில் சோனியா காந்தியை மாயாவதி இன்று சந்திக்கிறார்
டெல்லியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியை, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி இன்று சந்திக்கிறார்.