காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் இந்திய ராணுவம் பதிலடி


காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் இந்திய ராணுவம் பதிலடி
x
தினத்தந்தி 16 March 2019 6:30 PM GMT (Updated: 16 March 2019 6:01 PM GMT)

காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு, இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.

ஜம்மு,

காஷ்மீர் மாநிலத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டையொட்டிய பூஞ்ச் மாவட்டத்தின் மன்கோடே செக்டாரில் பாகிஸ்தான் துருப்புகள் நேற்று மதியம் சுமார் 1.30 மணிக்கு அத்துமீறி தாக்குதல் நடத்தினர்.

 பீரங்கி குண்டுகளையும், சிறிய ரக ஆயுதங்களையும் பயன்படுத்தி அவர்கள் நடத்திய தாக்குதலுக்கு, இந்திய ராணுவத்தினர் சரியான பதிலடி கொடுத்து விரட்டியடித்தனர்.

அதே நேரத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என ராணுவ செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து கடந்த மாதம் 26–ந் தேதி இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தானுக்கு சென்று குண்டு போட்டு பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்ததை அடுத்து காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அமைந்துள்ள பகுதியில், பாகிஸ்தான் துருப்புகள் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே அதே பகுதியில் அமைந்துள்ள மென்தார் செக்டாரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் ஒருவர் கண்ணிவெடி தாக்குதலில் சிக்கி படுகாயம் அடைந்தார். அவர் உடனடியாக மீட்கப்பட்டு ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.


Next Story