உத்தரகாண்ட் மாநிலத்தில் முன்னாள் முதல்-மந்திரியின் மகன் காங்கிரசில் இணைந்தார்


உத்தரகாண்ட் மாநிலத்தில் முன்னாள் முதல்-மந்திரியின் மகன் காங்கிரசில் இணைந்தார்
x
தினத்தந்தி 16 March 2019 11:46 PM IST (Updated: 16 March 2019 11:46 PM IST)
t-max-icont-min-icon

உத்தரகாண்ட் மாநிலத்தில் முன்னாள் முதல்-மந்திரியின் மகனான மணிஷ் கந்தூரி காங்கிரசில் இணைந்தார்.

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநில பா.ஜனதா தலைவரும், எம்.பி. மற்றும் முன்னாள் முதல்-மந்திரியுமான பி.சி.கந்தூரியின் மகன் மணிஷ் கந்தூரி ராகுல் காந்தி முன்னிலையில் இன்று காங்கிரசில் இணைந்தார். அங்கு நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரசார கூட்டத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

கூட்டத்தில் ராகுல் காந்தி பேசும்போது, ‘‘முன்னாள் முதல்-மந்திரியான கந்தூரி ராணுவத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தலைவராக இருந்தார். நாட்டின் பாதுகாப்புக்காக ராணுவத்துக்கு தேவையான ஆயுதங்கள் வழங்கப்படாதது குறித்து அவர் சில கேள்விகளை எழுப்பினார். இதற்காக அவரை குழு தலைவர் பதவியில் இருந்து பா.ஜனதா நீக்கிவிட்டது. இதிலிருந்து பா.ஜனதாவில் உண்மைக்கு இடமில்லை என தெரியவருகிறது’’ என்றார்.


Next Story