வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து போட்டியிடுவேன் - ‘பீம் ஆர்மி’ தலைவர் அறிவிப்பு


வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து போட்டியிடுவேன் - ‘பீம் ஆர்மி’ தலைவர் அறிவிப்பு
x
தினத்தந்தி 16 March 2019 9:10 PM GMT (Updated: 16 March 2019 9:10 PM GMT)

வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து போட்டியிடுவேன் என பீம் ஆர்மி தலைவர் அறிவித்துள்ளார்.

புதுடெல்லி,

உத்தரபிரதேசத்தில் ‘பீம் ஆர்மி’ என்ற தலித் அமைப்பு இயங்கி வருகிறது. அதன் தலைவர் சந்திரசேகர் ஆசாத். இவர், பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் கன்சிராம் பிறந்தநாளையொட்டி, டெல்லியில் நடந்த பொதுக்கூட்டத்தில், கன்சிராம் சகோதரி ஸ்வர்ண கவுருடன் பங்கேற்றார்.

கூட்டத்தில், சந்திரசேகர் ஆசாத் பேசியதாவது:-

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து நான் போட்டியிடுவேன். எனக்கு எம்.பி., எம்.எல்.ஏ. ஆகும் ஆசை இல்லை. அப்படி இருந்திருந்தால், தனித்தொகுதியில் நின்றிருப்பேன். அரசியல் சட்டத்தையும், தலித் உரிமைகளையும் பாதுகாக்க இம்முடிவை எடுத்துள்ளேன்.

வாரணாசியில் இருந்து மோடி நாடாளுமன்றத்துக்கு செல்லவிடாமல் தடுப்பேன். நான் போட்டியிடுவதை அறிந்துதான், துப்புரவு தொழிலாளிகளின் பாதங்களை மோடி கழுவினார். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story