கர்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு ஏப்ரல் 18-ந் தேதி முதல்கட்ட தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரம்
கர்நாடகத்தில் முதல்கட்டமாக 14 தொகுதி களுக்கு ஏப்ரல் 18-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இதனால் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
பெங்களூரு,
இந்திய நாடாளு மன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில், 28 நாடாளுமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடகத்தை பொறுத்தவரையில் 2 கட்டங்களாக அடுத்த மாதம் (ஏப்ரல்) 18, 23-ந் தேதிகளில் தேர்தல் நடக்கிறது.
ஏப்ரல் 18-ந் தேதி முதல்கட்டமாக உடுப்பி-சிக்கமகளூரு, ஹாசன், தட்சிண கன்னடா, சித்ரதுர்கா, துமகூரு, மண்டியா, மைசூரு, சாம்ராஜ்நகர், பெங்களூரு புறநகர், பெங்களூரு வடக்கு, பெங்களூரு மத்திய, பெங்களூரு தெற்கு, சிக்பள்ளாப்பூர், கோலார் ஆகிய தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. 2-வது கட்ட தேர்தல் மீதமுள்ள 14 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23-ந் தேதி நடக்கிறது.
இதில் முதல் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தான் தேர்தல் அதிகாரிகள் ஆவார்கள். கலெக்டர் அலுவலகங்களில் வேட்பாளர்கள் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும்.
பெங்களூருவை பொறுத்தவரையில் பெங்களூரு வடக்கு, பெங்களூரு தெற்கு, பெங்களூரு மத்திய ஆகிய 3 தொகுதிகள் உள்ளன. பெங்களூரு வடக்கு தொகுதி தேர்தல் அதிகாரியாக, பெங்களூரு நகர மாவட்ட கலெக்டர் விஜயசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். பெங்களூரு வடக்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் நகர கலெக்டர் அலுவலகத்தில் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும்.
பெங்களூரு மத்திய தொகுதி தேர்தல் அதிகாரியாக பெங்களூரு மாநகராட்சி கூடுதல் கமிஷனர் (நிர்வாகம்) லோகேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது அலுவலகம் பெங்களூரு மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ளது.
பெங்களூரு தெற்கு தொகுதி தேர்தல் அதிகாரியாக மாநகராட்சி கூடுதல் கமிஷனர் (தென்மண்டலம்) எஸ்.எஸ்.நகுல் நியமிக்கப் பட்டுள்ளார். அவரது அலுவலகம் ஜெயநகர் 2-வது பிளாக்கில் அமைந்துள்ளது.
சம்பந்தப்பட்ட தொகுதிகளில் போட்டியிட விரும்புபவர்கள், அந்த அலுவலகங்களுக்கு சென்று மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும். மனுக்களை தாக்கல் செய்ய வருபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மனுக்களை தாக்கல் செய்யும்போது, வேட்பாளருடன் குறைந்த எண்ணிக்கையில் கட்சி பிரமுகர்களை உள்ளே அனுமதிக்க தேர்தல் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். 5 பேர் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
மனுக்களை தாக்கல் செய்ய வருகிற 26-ந் தேதி கடைசி நாள் ஆகும். 27-ந் தேதி மனுக்கள் பரிசீலனையும், 29-ந் தேதி மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் ஆகும். முதல்கட்ட தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு ஏப்ரல் 18-ந் தேதி நடக்கிறது. மே மாதம் 23-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இதனால் தற்போது முதல்கட்டமாக தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதுபோல் தனித்துபோட்டியிடும் பா.ஜனதாவும், கூட்டணி அமைத்து போட்டியிடும் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கட்சிகளும் தங்களுக்கான வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இன்னும் ஓரிரு நாட்களில் பா.ஜனதா, காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) சார்பில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கூட்டணியில் குறிப்பாக காங்கிரசில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட ஒரே தொகுதிக்கு பலர் விருப்பம் தெரிவித்து வருகிறார்கள். இதனால் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
இதே நிலை பா.ஜனதாவிலும் காணப்படுகிறது. இருப்பினும் பா.ஜனதா ஒருங்கிணைப்பு குழுவில் தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர் பட்டியலுடன் அக்கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா இன்று (திங்கட்கிழமை) டெல்லி சென்று, தேசிய தலைவர் அமித்ஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதன் பின்னர் பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனால் கர்நாடக அரசியல் களத்தில் அனல் பறக்க தொடங்கிவிட்டது.

வேட்புமனுக்கள் தாக்கல் காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை ஆகும். மனுக்கள் பெறப்படும் அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் அதனை சுற்றி 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
மனுக்களை தாக்கல் செய்ய வருகிற 26-ந் தேதி கடைசி நாள் ஆகும். 27-ந் தேதி மனுக்கள் பரிசீலனையும், 29-ந் தேதி மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் ஆகும். முதல்கட்ட தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு ஏப்ரல் 18-ந் தேதி நடக்கிறது. மே மாதம் 23-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இதனால் தற்போது முதல்கட்டமாக தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதுபோல் தனித்துபோட்டியிடும் பா.ஜனதாவும், கூட்டணி அமைத்து போட்டியிடும் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கட்சிகளும் தங்களுக்கான வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இன்னும் ஓரிரு நாட்களில் பா.ஜனதா, காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) சார்பில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கூட்டணியில் குறிப்பாக காங்கிரசில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட ஒரே தொகுதிக்கு பலர் விருப்பம் தெரிவித்து வருகிறார்கள். இதனால் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
இதே நிலை பா.ஜனதாவிலும் காணப்படுகிறது. இருப்பினும் பா.ஜனதா ஒருங்கிணைப்பு குழுவில் தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர் பட்டியலுடன் அக்கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா இன்று (திங்கட்கிழமை) டெல்லி சென்று, தேசிய தலைவர் அமித்ஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதன் பின்னர் பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனால் கர்நாடக அரசியல் களத்தில் அனல் பறக்க தொடங்கிவிட்டது.
Related Tags :
Next Story