கோவாவின் அடுத்த முதல்வர் யார் என்பதில் இன்னும் உடன்பாடு எட்டவில்லை: பாஜக எம்.எல்.ஏ
கோவாவின் அடுத்த முதல்வர் யார் என்பதில் இன்னும் உடன்பாடு எட்டவில்லை என்று பாஜக எம்.எல்.ஏ தெரிவித்தார்.
பானஜி
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைவை தொடர்ந்து, அங்கு புதிய முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பாரதீய ஜனதா தனது கூட்டணி கட்சிகளுடன் இவ்விவகாரம் தொடர்பாக தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது.
இன்று அதிகாலை கோவா வந்த நிதின் கட்காரி, கூட்டணி கட்சி தலைவர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்துவார் என தெரிகிறது. தற்போது, வரை புதிய முதல்வர் யார்? என்பதில் எந்த உடன்பாடும் எட்டவில்லை என்று பாஜக எம்.எல்.ஏ மைக்கேல் லோபோ தெரிவித்தார்.
பாஜகவின் கூட்டணி கட்சியான மகராஷ்டிரவதி கோம்ண்டக் கட்சி (MGP) கட்சியைச்சார்ந்த எம்.எல்.ஏ சுதின் தவாலிகர், முதல் மந்திரியாக விருப்வுவதாகவும், இதனால், ஆலோசனையில் முட்டுக்கட்டை நீடிப்பதாக தகவல்கள் கூறுகின்றன. பாஜக தனது கட்சியைச்சேர்ந்த ஒருவரை முதல்மந்திரியாக்க விரும்புவதால் ஆலோசனையில் உடன்பாடு எட்டப்படவில்லை என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்று மாலை இவ்விவகாரத்தில் முடிவு எட்டும் என்று பாஜக எம்.எல்.ஏ மைக்கேல் லோபோ தெரிவித்தார்.
இதற்கு மத்தியில், 14 இடங்களை வைத்துள்ள காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உள்ளதால், ஆட்சி அமைக்க அக்கட்சியும் முயற்சித்து வருகிறது. 40 எம்.எல்.ஏக்களை கொண்ட கோவா சட்டமன்ற தொகுதியில் 4 இடங்கள் காலியாக உள்ளன.
Related Tags :
Next Story