உங்களுடைய உதவியெல்லாம் வேண்டாம் - காங்கிரஸை கடுமையாக சாடிய மாயாவதி
உத்தரபிரதேசம் முழுவதும் நீங்கள் வேட்பாளரை நிறுத்திக் கொள்ளலாம் என காங்கிரஸை மாயாவதி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
லக்னோ,
80 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்தில் காங்கிரசை கழற்றிவிட்டு சமாஜ்வாடி பகுஜன் சமாஜ்- ராஷ்டீரிய லோக் தளம் கட்சிகள் கூட்டணி வைத்துள்ளது. சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதியிலும், ராகுல் காந்தியின் அமேதி தொகுதியிலும் போட்டி கிடையாது என கூட்டணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து தனித்து களமிறங்குவதாக கூறிய காங்கிரஸ், பிரியங்காவை அரசியலுக்கு கொண்டு வந்து பிரசாரம் மேற்கொண்டு, வாக்குகளை பிரிக்கும் என பார்க்கப்படுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியும் நல்லெண்ண அடிப்படையில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் 7 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களை நிறுத்தாது என கூறியது.
இதனை பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கடுமையாக சாடியுள்ளார். காங்கிரஸ் கட்சியுடன் இனி ஒருபோதும் கூட்டணி என்பது கிடையாது. காங்கிரஸ் கட்சி உ.பி.யில் உள்ள 80 தொகுதிகளிலுமே வேட்பாளர்களை நிறுத்திக்கொள்ளலாம்.
எங்களுடைய கூட்டணிக்கு 7 தொகுதிகளை ஒதுக்கி குழப்பத்தை காங்கிரஸ் ஏற்படுத்த வேண்டாம். எங்களுடைய மகா கூட்டணியாலே பா.ஜனதாவை வெற்றிக் கொள்ள முடியும் என கூறியுள்ளார் மாயாவதி.
Related Tags :
Next Story