கேரளாவில் வெஸ்ட் நைல் வைரஸ் நோய் தாக்கி சிறுவன் உயிரிழப்பு


கேரளாவில் வெஸ்ட் நைல் வைரஸ் நோய் தாக்கி சிறுவன் உயிரிழப்பு
x
தினத்தந்தி 18 March 2019 7:24 PM IST (Updated: 18 March 2019 7:24 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் வெஸ்ட் நைல் வைரஸ் தாக்கியதில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் மலப்புரத்தில் வசிக்கும் 7 வயது சிறுன் வைரஸ் தாக்குதலால் கோழிக்கோடு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டான். நாளுக்கு நாள் சிகிச்சை அளித்தும் சிறுவனின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை தொடர்ந்து சிகிச்சை குறித்து பரிசோதனை நடத்தப்பட்டது. சிறுவன் வெஸ்ட் நைல் வைரஸால் தாக்கப்பட்டது தெரியவந்தது. 

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த நோய் பற்றிய தகவலால், அந்த பகுதி முழுவதும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் கியூலக்ஸ் வகை  கொசுக்கள் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது. 

வட அமெரிக்காவில் இந்த நோயின் தாக்கத்தால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் மூலம் மூளைக்காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வெஸ்ட் நைல் காய்ச்சல் வந்தால், சளி பிடிப்பது, உடல் வலி, சோர்வு மற்றும் குமட்டல் அதிகமாக இருக்கும் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Next Story