மும்பையில் நடைமேம்பாலம் இடிந்து விழுந்து 6பேர் உயிரிழந்த விவகாரத்தில் ஆடிட்டர் நீரஜ் தேசாய் கைது
மும்பையில் நடைமேம்பாலம் இடிந்து விழுந்து 6 பேர் உயிரிழந்த விவகாரத்தில் ஆடிட்டர் நீரஜ் தேசாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பை,
மும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்தை இணைக்கும் நடைமேம்பாலம் கடந்த 14ஆம் தேதி இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 31 பேர் படுகாயமடைந்தனர்.
இடிந்து விழுந்த நடைமேம்பாலம் கடந்த 2012-14-ம் ஆண்டில் சீரமைக்கப்பட்டது. சீரமைக்கப்பட்ட 6 ஆண்டுகளில் இடிந்து விழுந்ததால் அந்த பணியை செய்த ஆர்.பி.எஸ். நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் அந்த பணியை மேற்பார்வை செய்த ஓய்வுபெற்ற மாநகராட்சி தலைமை பொறியாளர் எஸ்.ஒ.கோரி, துணை தலைமை என்ஜினீயர் ஆர்.பி. தாரே, நிர்வாக என்ஜினீயர் ஏ.ஆர்.பாட்டீல், உதவி என்ஜினீயர் எஸ்.எப்.கக்குல்தே ஆகியோர் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இடிந்து விழுந்த நடைமேம்பாலம் பயன்படுத்த தகுதியானது என கட்டமைப்பு ஆய்வு நடத்தி சான்றிதழ் வழங்கிய பேராசிரியர் தேசாய் தணிக்கை நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் தொடர்ந்து மாநகராட்சி, அரசு பணி செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. முறையாக தணிக்கை செய்யாமல் தவறான தகவலை கொடுத்து பலரின் உயிர் போக காரணமான பேராசிரியர் தேசாய் தணிக்கை நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தணிக்கை பணிக்காக அந்த நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டிய பணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த நிறுவனத்துக்கு கொடுத்த பணத்தை திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடைமேம்பாலம் இடிந்து விழுந்து 6 பேர் உயிரிழந்த விவகாரத்தில் ஆடிட்டர் நீரஜ் தேசாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
Related Tags :
Next Story