மராட்டியத்தில் 48 தொகுதிகளிலும் சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் கூட்டணி போட்டி


மராட்டியத்தில் 48 தொகுதிகளிலும் சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் கூட்டணி போட்டி
x
தினத்தந்தி 19 March 2019 5:42 PM IST (Updated: 19 March 2019 5:42 PM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் 48 தொகுதிகளிலும் சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணி போட்டியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மராட்டியத்தில் பா.ஜனதா தலையிலான கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கும் இடையேதான் போட்டி என இதுவரையில் இருந்தது. மராட்டியத்தில் 48 தொகுதிகள் உள்ளது. முதலில்  உத்தரபிரதேசத்தில் காங்கிரசை கழற்றிவிட்ட சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் அம்மாநிலத்தை தாண்டியும் கூட்டணி போட்டியை அறிவிக்கிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் போட்டியிடுவோம் என அறிவித்தது. இப்போது மராட்டியத்திலும் கூட்டணியாக போட்டியிடுகிறது. விரைவில் தொகுதி பங்கீடு தகவல் வெளியாக உள்ளது. 

மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி கடந்த பாராளுமன்ற தேர்த்லில் 501 தொகுதிகளில் போட்டியிட்டு 445 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story