மோடி மீண்டும் பிரதமரானால் இந்தியா தேர்தலையே பார்க்க முடியாது -அசோக் கெலாட்
மோடி மீண்டும் பிரதமரானால் இந்தியா தேர்தலையே இனி பார்க்க முடியாது என அசோக் கெலாட் கூறியுள்ளார்.
டெல்லியில் காங்கிரஸ் தலைவரும், ராஜஸ்தான் முதல்வருமான அசோக் கெலாட் பேசுகையில், ஜனநாயகமும், தேசமும் மோடியின் ஆட்சியில் பெரும் ஆபத்தில் சிக்கியுள்ளது. மோடி ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார். தேர்தலில் வெற்றிபெற போர் சரியான முடிவு கிடையாது என்று தெரிந்திருந்தாலும், பாகிஸ்தானுடன் போருக்குக் கூட மோடி செல்வார். இந்த தேர்தலில் மக்கள் மீண்டும் பிரதமர் மோடியை தேர்வு செய்து பிரதமராக அமர்த்தினால், இனிமேல் தேசத்தில் தேர்தலே நடக்காது.
ரஷியா, சீனாவில் என்ன நடந்ததோ அதை நோக்கி இந்தியாவும் செல்லும். ஒரு கட்சி முறைக்கு செல்லும், யார் குடியரசு தலைவராக வர வேண்டும் அல்லது பிரதமராக வர வேண்டும் என்பதை அவர்கள்தான் முடிவு செய்வார்கள். இந்திய தூதரகங்களை தவறாக பயன்படுத்தி, வெளிநாடு வாழ் இந்தியர்களின் ஆதரவை தனது கட்சிக்காக மோடி பெறுகிறார். ஜனநாயகத்தில் சகிப்புத்தன்மை இருக்க வேண்டும். ஆனால், பா.ஜனதா தலைமையில் இருப்பவர்களுக்கு பொறுமை, சகிப்புத்தன்மை இல்லை, எதிர்க்கட்சியினர் யாரும் கேள்வி கேட்பதை அவர்கள் விரும்புவதில்லை. சகிப்புத்தன்மை என்பதே அவர்களின் மரபணுவிலே கிடையாது என விமர்சனம் செய்துள்ளார்.
Related Tags :
Next Story