தேர்தல் செய்திகள்

காங்கிரசுக்காக சல்மான் கான் பிரசாரம் செய்கிறார்? + "||" + Cong seeks Salman Khans help to capture BJPs Indore citadel

காங்கிரசுக்காக சல்மான் கான் பிரசாரம் செய்கிறார்?

காங்கிரசுக்காக சல்மான் கான் பிரசாரம் செய்கிறார்?
காங்கிரசுக்காக சல்மான் கான் பிரசாரம் செய்கிறார்?
மத்திய பிரதேசத்தில் பா.ஜனதா கோட்டையில் பிரசாரம் செய்ய சல்மான் கானுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் நட்சத்திரங்களை பிரசாரத்திற்கு களமிறக்க அரசியல் கட்சிகள் முயற்சி செய்கின்றன. இப்போது  மத்திய பிரதேசத்தில் பா.ஜனதா கோட்டையில் பிரசாரம் செய்ய சல்மான் கானுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் பாராளுமன்றத் தொகுதியில் மக்களவை சபாநாயர் சுமித்ரா மகாஜன் 1989-ம் ஆண்டிலிருந்து வெற்றிப்பெற்று வருகிறார். அவரை தொகுதி மக்கள் தங்களுடைய சகோதரி என்றே அழைக்கிறார்கள்.

பா.ஜனதா கோட்டையாக விளங்கும் இந்தூர் இந்தி நடிகர் சல்மான் கான் பிறந்த ஊராகும்.  இப்போது அவரை பிரசாரத்திற்காக இந்தூருக்கு காங்கிரஸ் அழைக்கிறது. 

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பங்கஜ் சதூர்வேதி பேசுகையில், “இந்தூரில் எங்களுக்காக பிரசாரம் செய்ய எங்களுடைய கட்சி தலைமை சல்மான் கானிடம் பேசியுள்ளது. எங்களுக்காக அவர் போட்டியிடுவார் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.” என கூறியுள்ளார். அரசியலில் இருந்து விலகி இருக்கும் சல்மான் கான் ஏற்கனவே 2009-ல் இந்தூர் மேயர் தேர்தலில் காங்கிரசுக்காக பிரசாரம் செய்தார். ஆனால் பா.ஜனதா வேட்பாளர்தான் வெற்றிப் பெற்று மேயர் ஆனார்.