உங்கள் குழந்தைகள் வாட்ச்மேனாக வேண்டுமா? மோடிக்கு வாக்களியுங்கள்... -மோடியை கிண்டல் செய்த கெஜ்ரிவால்


உங்கள் குழந்தைகள் வாட்ச்மேனாக வேண்டுமா? மோடிக்கு வாக்களியுங்கள்... -மோடியை கிண்டல் செய்த கெஜ்ரிவால்
x

உங்கள் குழந்தைகள் வாட்ச்மேனாக வேண்டுமா? மோடிக்கு வாக்களியுங்கள்... என பிரதமர் மோடியை கெஜ்ரிவால் கிண்டல் செய்துள்ளார்.

பிரதமர் மோடி நானும்கூட காவலாளிதான் என்கிற பிரசாரத்தை டுவிட்டரில் மேற்கொண்டு வருகிறார். பா.ஜனதா தலைவர்கள்  தங்கள் பெயர்களுக்கு முன் சவுகிதார் (காவலாளி) எனும் வார்த்தையை பயன்படுத்தி வருகிறார்கள். பிரதமர் மோடியின் இப்பிரசாரத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ள கெஜ்ரிவால், உங்கள் குழந்தைகள் வாட்ச்மேனாக வேண்டுமா? மோடிக்கு வாக்களியுங்கள்... என கலாய்த்து உள்ளார்.

“பிரதமர் மோடி ஒட்டுமொத்த தேசத்தை காவல்காரராக மாற்ற முயற்சிக்கிறார். மக்கள் தங்கள் குழந்தைகளை  காவல்காரராக ஆளாக்கிப் பார்க்க விரும்பினால், அவர்கள் தாராளமாக மோடிக்கு வாக்களிக்கலாம். ஆனால், தங்கள் குழந்தைக்கு நல்ல கல்வி தேவை, எதிர்காலத்தில் மருத்துவராகவோ, பொறியாளராகவோ, வழக்கறிஞராகவோ மாற வேண்டும் என்று மக்கள் விரும்பினால் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களியுங்கள்” என டுவிட்டரில் கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story