பெங்களூருவில் மிராஜ் 2000 விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே விபத்துக்குள் சிக்கியது என தகவல்


பெங்களூருவில் மிராஜ் 2000 விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே விபத்துக்குள் சிக்கியது என தகவல்
x
தினத்தந்தி 20 March 2019 12:09 PM GMT (Updated: 20 March 2019 12:24 PM GMT)

பெங்களூருவில் மிராஜ் 2000 விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே விபத்துக்குள் சிக்கியது என தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூருவில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தின் விமான நிலையத்தில் பிப்ரவரி ஒன்றாம் தேதி பயிற்சி விமானமான மிராஜ் 2000  விபத்துக்குள்ளானது. விமானம் விபத்தில் சிக்கியபோது உடனடியாக விமானிகள் இருவரும் வெளியே குதித்து தப்பிக்க முயற்சி செய்தார்கள். ஆனால் அதற்குள் தீப்பற்றிக்கொண்டது. இதில் இரு விமானிகள் உயிரிழந்தனர். இருவரும் தொழில்நுட்பம் மற்றும் சோதனைப்பிரிவை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் விபத்தில் சிக்கிய விமானத்தின் பிளாக் பாக்ஸ் தரவுகள், விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே விபத்தில் சிக்கியது என தெரிகிறது என தகவல் வெளியாகியுள்ளது. விமானம் விமானிகளின் தவறு காரணமாக விபத்தில் சிக்கவில்லை, சென்சார் தொடர்பான தொழில்நுட்பம் செயல் இழப்பை காட்டுகிறது. இவ்விவகாரம் தொடர்பாக நீதிமன்ற விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Next Story