பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் விரட்டியடிக்க புதிய வெடிபொருட்களை வழங்க விமானப்படை கோரிக்கை


பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் விரட்டியடிக்க புதிய வெடிபொருட்களை  வழங்க விமானப்படை கோரிக்கை
x
தினத்தந்தி 20 March 2019 6:05 PM IST (Updated: 20 March 2019 6:05 PM IST)
t-max-icont-min-icon

எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம், F-16 போர் விமானங்களை நிறுத்துவதாக கூறப்படுவதால், புதிய வெடிபொருட்களை உடனடியாக வழங்குமாறு, இந்திய விமானப்படை கோரியிருப்பதாக, தகவல் வெளியாகியிருக்கிறது.

புதுடெல்லி

எல்லையில் பெரும் பதற்றம் நீடித்து வருகிறது. இதன் எதிரொலியாக, வட அரபிக்கடல் பகுதியில் போர்க்கப்பல்களை இந்தியா நிறுத்தி உள்ளது.

பாகிஸ்தானும் தன் பங்கிற்கு, எல்லையையொட்டி தனது விமானப்படைத் தளங்களில், F-16 போர் விமானங்களை தயார் நிலையில் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால், கடுமையான பதில் தாக்குதல் நடத்தி, விரட்டியடிப்பதற்கு ஏதுவாக, புதிய வெடிபொருட்களை உடனடியாக வழங்குமாறு, மத்திய அரசிடம் இந்திய விமானப்படை கோரியிருப்பதாக, தகவல் வெளியாகியிருக்கிறது.

டெல், தல்வார் மற்றும் சாரு வகுப்பு போர்க் கப்பல்களுக்கான மல்டிமீட் வெடி குண்டுகள் மற்றும் தீ கட்டுப்பாட்டு அமைப்புகள் கையகப்படுத்தல் உள்பட ரூ. 2355 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு திங்களன்று பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்து உள்ளது. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் இந்தியாவில் 10 லட்சம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கையெறி குண்டுகளை வாங்குவதற்கான திட்டத்தை அமைச்சர் மேலும் உறுதிப்படுத்தினார்.

Next Story