ஒடிசாவின் கிஞ்சிலி தொகுதி: 5-வது முறையாக போட்டியிடும் நவீன் பட்நாயக் - வேட்புமனு தாக்கல் செய்தார்


ஒடிசாவின் கிஞ்சிலி தொகுதி: 5-வது முறையாக போட்டியிடும் நவீன் பட்நாயக் - வேட்புமனு தாக்கல் செய்தார்
x
தினத்தந்தி 20 March 2019 6:30 PM GMT (Updated: 20 March 2019 6:01 PM GMT)

ஒடிசாவின் கிஞ்சிலி தொகுதியில் 5-வது முறையாக போட்டியிடும் நவீன் பட்நாயக், நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

புவனேஸ்வர்,

ஒடிசாவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் பிஜூ ஜனதாதள தலைவரும், முதல்-மந்திரியுமான நவீன் பட்நாயக் கிஞ்சிலி தொகுதியில் 5-வது முறையாக களமிறங்குவதாக அறிவித்தார். இந்த தொகுதியில் தொடர்ந்து 4 முறை வெற்றி பெற்ற அவர், 5-வது முறையாக நேற்று அந்த தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

மாநிலத்தில் கடந்த 4 முறை நடந்த சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்ற பிஜூ ஜனதாதளம் சுமார் 20 ஆண்டுகளாக மாநிலத்தில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கி வருகிறது. ஆனால் வருகிற தேர்தலில் அதன் வெற்றிக்கு பெரும் போட்டி இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். ஒடிசாவில் பா.ஜனதா மற்றும் காங்கிரசின் வளர்ச்சி மட்டுமின்றி, பிஜூ ஜனதாதளத்தின் உள்ளேயும் தலைவர்களுக்கு இடையேயான அதிருப்தியால் இந்தமுறை வெற்றி வாய்ப்பு அவ்வளவு எளிதாக இருக்காது என கருதப்படு கிறது.

இதனால்தான் முதல்-மந்திரி நவீன் பட்நாயக் முதல் முறையாக 2 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.


Next Story