தேசிய செய்திகள்

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் : இந்திய வீரர் பலி + "||" + Soldier killed as Pak army violates ceasefire along LoC in Rajouri

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் : இந்திய வீரர் பலி

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் : இந்திய வீரர் பலி
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் இந்திய வீரர் பலியானார்.
ஜம்மு,

எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் கடந்த சில தினங்களாக தொடர்ந்து அரங்கேற்றி வருகிறது. பாகிஸ்தானின் இந்த அத்துமீறிய செயலுக்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுக்கின்ற போதிலும், பாகிஸ்தான் அவ்வப்போது எல்லையில் அத்துமீறலை தொடர்ந்து வருகிறது.

அந்த வகையில், ராஜோரி மாவட்டத்தில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. மோட்டார்கள் ரக ஆயுதங்கள் மூலம் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியானார்.  ஜனவரி மாதத்தில் இருந்து தற்போது வரை பாகிஸ்தான் 110 முறை எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. 36 சாலைகள் மற்றும் ஐந்து முக்கிய பூங்காக்களுக்கு காஷ்மீர் என பெயர் சூட்டும் பாகிஸ்தான்
பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள 36 சாலைகள் மற்றும் ஐந்து முக்கிய பூங்காக்களுக்கு காஷ்மீர் என பெயர் சூட்டுகிறது.
2. தார் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை இந்தியாவும் ரத்து செய்தது
ஜோத்பூர் - கராச்சி இடையிலான தார் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை இந்தியாவும் ரத்து செய்துள்ளது.
3. பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மசூதியில் குண்டு வெடிப்பு; 5 பேர் பலி
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் குவெட்டா மசூதியில் நடந்த குண்டு வெடிப்பில் 5 பேர் பலியாகி உள்ளனர்.
4. காஷ்மீர் விவகாரத்தில் உலக நாடுகளின் கவனத்தை ஈர்ப்பதற்கு பாகிஸ்தான் திட்டம்
காஷ்மீர் விவகாரத்தில் உலக நாடுகளின் கவனத்தை ஈர்ப்பதற்கு பாகிஸ்தான் திட்டமிட்டு உள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்து உள்ளது.
5. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் இந்திய துணை தூதர் கவுரவ் அலுவாலியாவுக்கு சம்மன்
போர் நிறுத்த மீறல்கள் தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் பாகிஸ்தான் இந்திய துணை தூதர் கவுரவ் அலுவாலியாவுக்கு சம்மன் அனுப்பி உள்ளது.